டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரை டெல்லியில் இருவர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.
சாலையில் சென்றபோது இருகார் ஓட்டுநர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரை எரிக்கும் அளவுக்கு விபரீதமாக சென்றுள்ளது.
தலைநகர் டெல்லியில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. செவர்லட் க்ரூஸ் எஸ்யுவியில் சென்றவருக்கும் ஃபார்ச்சுனரில் சென்றவருக்கும் சாலையின் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் விபரீதமாக ஏதேனும் செய்துவிடவேண்டும் என நினைத்த செவர்லட் க்ரூஸில் சென்றவருக்கு ஆத்திரம் முற்றிடவே, தனது நண்பர் ஒருவருடன் சென்று கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்பிலான ஃபார்ச்சுனர் காரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் காருக்கு தீ வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








