5 நிமிஷ ஜாலிக்காக... எல்லாமே மொத்தமா முடிஞ்சிடுச்சி! ஃபார்ச்சூனர் காரின் மதிப்பு தெரியல இவங்களுக்கு

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), நம் இந்தியர்கள் பலர் வாங்க விரும்பும் கார்களுள் ஒன்று. ஆனால், ஃபார்ச்சூனர் காரின் விலை சற்று அதிகமாக இருப்பதால், அதனை எல்லாராலும் வாங்க முடிவதில்லை. இவ்வாறு, வாங்க ஆசைப்பட்டாலும் அதிக விலையால் வாங்க முடியாமல் நிறைய பேர் ஏக்கத்துடன் இருக்கும் நிலையில், இங்கு சிலர் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் ஒரு ஃபார்ச்சூனர் கார் ஒருபக்கமாக கவிழ்ந்து பெரிதும் சேதத்தை சந்தித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ யூடியூப் (Youtube)-இல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவையும் ஒன்றாக சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடப்பதற்கு காரணம், வாகன ஓட்டிகள் இடையே போதிய சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆகும்.

toyota fortuner car crashed

குறிப்பாக, பொது சாலைகளில் கார் பந்தயங்கள் மேற்கொள்ளப்படுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளிவருகின்றன. அவ்வாறு, இணையத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நண்பர்கள் இரண்டு பேர் மேற்கொண்ட கார் பந்தயம் தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த கார் பந்தயத்தை மேற்கொள்வதற்காகவே மூடப்பட்ட சாலை ஒன்றிற்கு இந்த நண்பர்கள் சென்றுள்ளனர்.

இரு ஃபார்ச்சூனர் கார்களில் இவர்கள் பந்தயத்தை மேற்கொண்ட நிலையில் அதில் ஒரு ஃபார்ச்சூனர் கார் டிரைவரின் கண்ட்ரோலை இழந்து சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இத்தனைக்கும், மூடப்பட்ட சாலை என்பதால் அந்த வழியாக எந்தவொரு வாகனமும் செல்லவில்லை. இந்த கார் பந்தயத்தில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் புதிய ஃபார்ச்சூனர் கார் ஒன்றும், ஒரு பழைய தலைமுறை ஃபார்ச்சூனர் கார் ஒன்றும் உட்படுத்தப்பட்டுள்ளன.

toyota fortuner car crashed

பந்தயத்தின் ஆரம்பத்தில், தற்போதைய மாடர்ன் ஃபார்ச்சூனர் கார் தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனை இரு ஃபார்ச்சூனர் கார் டிரைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதாவது, ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரை ஓட்டிய டிரைவரும் நியூ ஃபார்ச்சூனர் கார் தான் கூடுதல் ஆற்றல்மிக்கது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், பந்தயத்தை வீடியோவாக காட்சிப்படுத்தி கொண்டிருந்தவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரை ஓட்டியவர் அதனை முழு செயல்திறன் உடன் ஓட்டவில்லை என வீடியோ எடுத்தவர் நினைத்துள்ளார். இதனால், ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரை தான் ஓட்டுவதாக கூறி டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

toyota fortuner car crashed

ஒரு கையில் கேமராவை பிடித்துக் கொண்டு வீடியோ எடுத்தவாறு, மற்றொரு கையால் ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்துக் கொண்டு காரை ஓட்டியுள்ளார். அவரது இந்த செயல்தான் கடைசியில் ஆபத்தாக முடிந்துள்ளது. ஒரு கையில் ஓல்டு ஜென்ரேஷன் காரை ஓட்டிய போதிலும், காரை மிக அதிக வேகத்தில் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், நியூ ஃபார்ச்சூனர் காரை அவரால் முந்த முடியவில்லை.

இதில், வெறுப்பின் உச்சிக்கு சென்றவர் காரை இன்னும் வேகமாக ஓட்ட முயற்சித்துள்ளார். இருப்பினும், பந்தயத்தில் தோற்றவர் பந்தயத்தின் இறுதியில் அதே வேகத்தில் காரை நிறுத்த பிரேக் கொடுத்துள்ளார். ஆனால், ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரில் எலக்ட்ரானிக் (Electronic) உதவிகள் நியூ ஜென்ரேஷன் ஃபார்ச்சூனரில் இருப்பதை போல் அதிகளவில் இல்லாததை அவர் அறிந்திருக்கவில்லை போல.

toyota fortuner car crashed

மிகவும் அழுத்தமாக பிரேக்கை கொடுத்ததில், ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் கார் டிரைவரின் கண்ட்ரோல் இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. வீடியோவை காட்சிப்படுத்திக் கொண்டே காரை ஓட்டிய டிரைவர் எதாவது செய்து காரை கண்ட்ரோலுக்கு கொண்டுவரலாம் என யோசிப்பதற்குள் அந்த ஃபார்ச்சூனர் கார் சாலையில் இருந்து விலகி அருகே இருந்த பள்ளமான பகுதியில் கவிழ்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்றாலும், இந்த ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் கார் பெரிதும் சேதத்தை சந்தித்துள்ளது. இறுதியில் காருக்கு பிரேக் கொடுத்து நிறுத்த முயன்றதினால்தான் இந்த அளவோடு, யாருக்கும் காயமில்லாமல் இந்த விபத்து முடிந்துள்ளது. அதுவே, ஓட்டிய வேகத்தில் அப்படியே காரை கொண்டுப்போய் எங்கேயாவது மோதியிருந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும்.

FAQs
நியூ ஜென்ரேஷன் ஃபார்ச்சூனரில் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அம்சம் என்ன?

மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்.

மேம்படுத்தப்பட்ட நியூ ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது?

இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள்.

கடைசியாக புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?

2021ஆம் ஆண்டு ஜனவரியில்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 22:56 [IST]
English summary
Toyota fortuner car lose driver control and crashed after drag race
மேலும்... #car accident #toyota fortuner #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X