பைக் உடன் மோதி கார் கவிழ்ந்து எங்கேயாவது பார்த்திருக்கீங்களா? அடையாளமே தெரியாத நிலையில் ராயல் என்பீல்டு பைக்!!
ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக் உடன் மோதலுக்கு உள்ளான பெரிய அளவிலான கார் ஒன்று ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது. மோதலில் கவிழ்ந்த கார் எது என்பதையும், பைக் உடன் மோதியதால் அவ்வளவு பெரிய கார் எவ்வாறு கவிழ்ந்தது என்பதையும் இனி பார்க்கலாம்.
சாலை போக்குவரத்து பாதுகாப்பானது என எப்போதுமே நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான நாடுகளில் நடக்கும் மரணங்களில் குறிப்பிடத்தக்க சதவீதம் சாலை விபத்துகளினாலேயே நடக்கிறது. அதிலிலும் குறிப்பாக, நமது இந்தியாவில் சாலைகளின் தரமும், சாலையை சுற்றிய சுற்றுச்சூழலும் எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றி கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன்.

இதனாலேயே சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. தினந்தோறும் செய்திகளில் குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியாவது இடம்பெற்று விடுகிறது. அவ்வாறான ஒரு சாலை விபத்து சம்பவம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கே அதிகம் காயம் ஏற்படும் என்பதை பார்த்திருக்கிறோம்.
ஏனெனில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களே பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால் அகமதாபாத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ராயல் என்பீல்டு பைக் மோதி டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற அளவில் பெரியதான கார் ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை செய்தியின் இறுதியில் காணலாம்.

இந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் நடுவே மரம் இருந்ததாகவும், இதன் காரணமாக எதிரெதிர் வாகனங்களை முழுமையாக பாதிக்கப்பட்ட இரு வாகன ஓட்டிகளாலும் பார்க்க முடியவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, பைக்கில் ஒருவர் எதிரே வருகிறார் என்பதை ஃபார்சூனர் கார் ஓட்டுனரால் காண முடிந்த போதிலும், அதற்கேற்ப உடனடியாக அவரால் செயல்பட முடியாமல் போனதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றப்படி, விபத்தின்போது கார் மற்றும் பைக் ஓட்டிகள் அதிவேகத்தில் வந்தனரா அல்லது இருவரும் மது உள்ளிட்ட போதையில் இருந்தனரா என்பது வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை. இந்த மோதலில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக, காரின் கண்ட்ரோலை ஓட்டுனர் இழந்ததால், கார் ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது.

"அடி கொடுத்த கைப்புள்ளக்கே இவ்வளவு அடினா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறீயா?" என்பதுபோல், அவ்வளவு பெரிய ஃபார்சூனர் காருக்கே இவ்வளவு சேதாரம் எனும்போது, பைக்கின் கதிநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நல்ல வேளையாக சம்பவத்தின்போது ராயல் என்பீல்டு பைக் ஓட்டுனர் ஹெல்மெட் அணிந்து இருந்துள்ளார்.
மறுப்பக்கம், ஃபார்ச்சூனர் காரில் பயணிகளை காப்பாற்றும் பொருட்டு ஏர்பேக் வெளியே வந்துள்ளது. இந்த வாகன ஓட்டிகள் இருவரில் ஒருவர் நிச்சயமாக அதிவேகமாக வந்து இருக்க வேண்டும். அத்துடன், கார் ஓட்டுனர் கண்ட்ரோலை இழந்த காரணத்தினாலேயே பைக்குடன் மோதி ஃபார்சூனர் போன்ற பெரிய கார் கவிழ்ந்துள்ளது. ராயல் என்பீல்டு பைக்குகளும் எடைமிக்கவை என்பதை மறந்துவிட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய சாலைகள் எந்த அளவிற்கு பாதுகாப்பற்றவை என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணம். ஏனெனில், சாலை விபத்துகள் பெரும்பாலும் சாலை விழிப்புணர்வு இல்லாமல் ஆக்ரோஷமாக பயணம் செய்வதினாலேயே ஏற்படுகின்றன. ஆனால் இந்த சம்பவத்தில் சாலைக்கு நடுவே மரம் இருந்த காரணத்தினால் விபத்து நடந்துள்ளது. விபத்தில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக உயிர் பிழைத்து இருப்பர் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









