மாப்பிள்ளைக்கு ஒடம்பு ஃபுல்லா மச்சம்! பொண்ணு வீட்டுக்காரங்க குடுத்த வரதட்சணைய பாத்து இந்தியாவே ஆடி போயிருச்சு!
இந்தியாவில் வரதட்சணை (Dowry) வாங்குவது சட்ட விரோதம் ஆகும். இதை மீறி வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறை தண்டனை (Imprisonment) விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், இந்தியாவில் நிறைய பேர் வரதட்சணை கொடுமைகளை அரங்கேற்றி கொண்டுதான் உள்ளனர்.
இதில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. நிறைய விஷயங்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் நொய்டா (Noida) நகரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில், மணமகன் வீட்டாருக்கு, மெர்சிடிஸ்-பென்ஸ் இ200 (Mercedes-Benz E200) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆகிய கார்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர 1.25 கிலோ தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது போதாதென்று 72 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு வீடு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வரதட்சணை' என்றில்லாமல் 'பரிசு' என்ற பெயரில், இவற்றை எல்லாம் மணமகன் வீட்டாருக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதில், கொடுமை என்னவென்றால், இதை எல்லாம் சபையிலேயே பட்டியல் போட்டு படித்திருப்பதுதான்.

சமூக வலை தளங்களில் இந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. சட்டப்படி பார்த்தால், மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடையே பரிசுகளை பரிமாறி கொள்வது சட்ட விரோதம் கிடையாது. ஆனால் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ வரதட்சணை கேட்பது சட்ட விரோதம் ஆகும்.
நொய்டா நகரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், இவை எல்லாம் வரதட்சணை என்றுதான் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது திருமணமே கிடையாது என்றும், இது ஒரு வியாபார நிகழ்வு என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே காவல் துறை இது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த திருமண நிகழ்வில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 2 கார்களுமே மிகவும் விலை உயர்ந்தவைதான். இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் இ200 காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது.
இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் இ200 காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 75 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.43 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் எந்த வேரியண்ட்? வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப விருப்பத்தின் பேரில் அன்பளிப்பாக பரிசுகளை வழங்குவது தவறில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக பெறப்படும் வரதட்சணைகள் என்பது எங்களை பொறுத்தவரை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த வரதட்சணை கொடுமைகள் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








