நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு என்று இந்தியாவில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. விற்பனையில் இந்த டொயோட்டா காருக்கு ஃபோர்டு எண்டேவர், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் இஸுஸு எம்யு-எக்ஸ் போட்டியாக விளங்குகின்றன.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

இருப்பினும் டொயோட்டா கார்கள் என்றாலே அவற்றிற்கு தனி சிறப்பு உண்டு. குறிப்பாக ஃபார்ச்சூனரை அதன் நம்பகத்தன்மைக்காகவும், குறைந்த பராமரிப்பு செலவிற்காகவும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். அதுமட்டுமின்றி டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஆஃப்-ரோடு திறனும் அதிகமாக உள்ளது.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

இதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளை இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்த வகையில் எஸ்யூவி.இஸ்.லைன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் கிரவுண்ட் க்ளியரென்ஸ் நன்கு பெரியதாகும். அதுமட்டுமில்லாமல் இந்த காரில் 4X4 தேர்வும் வழங்கப்படுகிறது. ஆனால் ஃபார்ச்சூனரின் இத்தகைய திறன்களை அதன் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

ஆனால் இங்கு ஒருத்தர் ஃபார்ச்சூனரின் 4x4 திறனை பயன்படுத்தி எளிதாக போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்த மேல் உள்ள வீடியோவில், லாரி ஒன்று சாலையை மறுத்தப்படி நிற்கிறது. அதனால் மற்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் அப்படி அப்படியே நிற்கின்றன.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

ஆனால் ஒரு ஃபார்ச்சூனர் கார் மட்டும் 'தான் ஹீரோ' என்பது போல் லாரிக்கும் சாலையின் மத்திய சுவருக்கும் இடையில் இருந்த குறுகிய இடத்தில் நுழைந்து செல்கிறது. கார் செல்வதற்கு போதிய இடம் இல்லை. இதனால் இந்த ஃபார்ச்சூனரின் ஓட்டுனர் காரின் ஒரு பக்க சக்கரங்களை சாலையின் மத்தியில் சுவற்றின் மீது ஏற்றி சென்றுள்ளார்.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

ஒருபக்க சக்கரங்கள் தான் சுவற்றின் மீது ஏற்றப்பட்டுள்ளன. மற்ற இரு சக்கரங்கள் சாலையிலேயே இருந்துள்ளன. இத்தகைய சாகசங்களை டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற 4x4 ட்ரைவ் சிஸ்டம் கொண்ட வாகனங்களில் மட்டுமே செய்ய முடியும்.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

இருப்பினும் இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுனரையும் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பார்ப்பதற்கு இது எளியது போன்று இருக்கலாம். ஆனால் மிகவும் கடினமானது. ஓட்டுனரின் கவனம் எங்காவது கொஞ்சம் குறைந்தாலும் விலையுயர்ந்த கார் அருகில் நின்றிருக்கும் லாரியில் மோத அதிக வாய்ப்புண்டு.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

அல்லது காரின் சஸ்பென்ஷன் & ஸ்டேரிங் பாகங்கள் பழுதாகலாம். குறைந்தப்பட்சம் சுவற்றின் மீது ஏற்றுவதால் டயர்கள் அடி வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஓட்டுனர் காரை சற்று வேகமாக சுவற்றில் ஏற்றினால் மட்டுமே நடைபெறும்.

நம்மூர் போக்குவரத்திற்கு ஃபார்ச்சூனர் தான் சரியான கார்!! இதற்கு உதாரணமே இந்த நிகழ்வு!

ஆனால் இங்கு மிகவும் மெதுவாகவே இந்த ஃபார்ச்சூனர் ஓட்டுனர் நடந்து கொண்டுள்ளார். இதில் இருந்து ஓட்டுனர் அனுபவம் மிக்கவர் என்பது தெரிகிறது. எல்லாத்தையும் விட ஃபார்ச்சூனரின் அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Fortuner owner beats traffic jam like a boss.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X