ஃபார்ச்சூனர் காரில் காஸ்ட்லியான வோட்காவை ஊற்றிய ஓல்டு மேன்.. சரக்கை வீணாக்கிட்டு சொன்னாரு பாருங்க ஒரு காரணம்!
இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) இருக்கின்றது. பெரிய உருவம் கொண்ட இந்த எஸ்யூவி (SUV) கார், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளித்தும் விடும். ஃபார்ச்சூனரின் இந்த திறனுக்காக இந்தியர்கள் பலர் அக்காரை வாங்கி வருகின்றனர். மிக முக்கியமாக ஃபார்ச்சூனரின் பிரமாண்ட மற்றும் முரட்டுத் தனமான தோற்றத்தின் காரணமாகவும் பலர் அதனை வாங்கி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே முதியவர் ஒருவர் இந்த காரின் எஞ்சின் பக்கத்தில் காஸ்ட்லியான வோட்கா (Vodka) மதுபானத்தை ஊற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை மிரள செய்திருக்கின்றது.
அந்த முதியவர் ஃபார்ச்சூனர் காரின் வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயர் (Wiper Fluid Reservoir)-லேயே மதுபானத்தை ஊற்றியிருக்கின்றார். இவ்வாறு முதியவர் செய்ததற்கு பின்னால் ஓர் காரணம் இருக்கின்றது. அந்த காரணம் என்ன என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

முதியவர்கள் இருவரும் இந்த காஸ்ட்லியான மதுபானத்தை வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயரில் ஊற்ற தாங்கள் பூஜ்ஜியம் டிகிரி செல்சியல் வெப்பநிலை உள்ள பகுதியில் பயணிப்பதே காரணம் என தெரிவித்திருக்கின்றனர். இதற்கும், காரில் மாதுபானத்தை ஊற்றியதற்கும் என்ன சம்பந்தம் இருக்க போகின்றது என கேட்கலாம்.
காரணம் இருக்கின்றது, சுத்தமான ஆல்கஸால் -114 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை வரை தாங்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரணத்திற்காகவே அவர்கள் வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயரில் மதுவை கலந்திருக்கின்றனர். வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்லிசியஸ் உள்ள பகுதியில் பயணிக்கும்போது காரின் விண்ட்ஷீல்டு வழக்கமான தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தால், அந்த நீரே பனிக் கட்டியாக மாறிவிடும்.
மேலும், விண்ட்ஷீல்டில் வந்து விழும் பனி துளிகளை அகற்றுவதற்கு பதிலாக, அது கூடுதல் பனியை சேர்த்துவிடும். அதுமட்டுமில்லைங்க, வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயரில் இருக்கும் தண்ணீரையும் அதிக குளிர்ச்சியான சூழல் ஐஸ் கட்டியாக மாற்றிவிடும். இதனைத் தடுக்கவே ஃபார்ச்சூனர் காரில் வந்த முதியவர்கள் வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயரில் வோட்காவை கலந்திருக்கின்றனர்.,
இதனால் அவர்களால் கடுமையான பனிப்பொழிவின்போதும் தெளிவான பார்வையைப் பெற்றுக் கொள்ள முடியும். இது சிறந்த யோசனையாக இருந்தாலும், ஓட்காவை வைப்பர் ஃப்ளூயிட் ரிசர்வோயரில் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில், வோட்காவில் 40 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் இருக்கும். இதனுடன் கூடுதலாக தண்ணீரை சேர்க்கும்போது அதன் செயல்திறன் சற்றே குறையக் கூடும்.
இதுதவிர, வோட்கா சற்று காஸ்ட்லியான மதுபானமும்கூட. ஆகையால், கூடுதல் செலவே இதனால் ஏற்படும். அதேவேளையில், விண்ட்ஷீல்டுக்கு என்றே பயன்படுத்தும் நோக்கில் சில கெமிக்கல்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை முதியவர்கள் பயன்படுத்திய வோட்காவைக் காட்டிலும் மிக மிக குறைவான விலைக் கொண்டவை ஆகும்.
இதனால்தான் வோட்காவை பயன்படுத்தியது சிறந்த ஐடியா இல்லை என கூறப்படுகின்றது. அதேவேளையில், வோட்காவில் சுத்தம் செய்வதற்கான எந்தவொரு மூலக் கூறும் வழங்கப்படவில்லை. ஆகையால், கண்ணாடிகளை அது பாதிக்கவும் செய்யலாம். எனவே விண்ட்ஷீல்டுகளுக்கு என தயாரிக்கப்பட்டு இருக்கும், குறிப்பாக, பனிப் பிரதேசங்களில் பயன்படுத்துவதற்கு என்று தயார் செய்யப்பட்டு இருக்கும் லிக்விடுகளை வாங்கி பயன்படுத்தலாம்.
இது நாம் எதிர்பார்க்கக் கூடிய தேவையைப் பூர்த்தி செய்யும். அதேவேளையில், மதுபானத்தைவிட குறைவான விலையிலும் அது விற்பனைக்குக் கிடைக்கும். முக்கியமாக எத்தகைய குளிர்ச்சியான சூழலில் பயணித்தாலும் அவை ஐஸாக மாறாது. இதனால்தான் வாகனத்துறை வல்லுநர்களும் அந்தந்த பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை உயர்ந்த சரக்கை காரின் விண்ட்ஷீல்டை சுத்தம் செய்ய முதியவர்கள் பயன்படுத்தி இருப்பது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. முக்கியமாக வோட்கா பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பையே இந்த நிகழ்வு ஏற்படுத்தி இருக்கின்றது. இதனாலேயே இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








