கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்கள் மிக அதிகளவில் நடந்து வருகின்றன. வாகன உரிமையாளர்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் கூட, சில சமயங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க முடிவதில்லை. ஒரு சில கொள்ளையர்கள் கை தேர்ந்தவர்களாக இருப்பதே இதற்கு காரணம். இந்த சூழலில், கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் கம்பீர். தற்போது கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்லி விட்ட கம்பீர், தீவிர அரசியல்வாதியாக மாறி விட்டார். பாரதிய ஜனதா கட்சியின் எம்பியாக இருந்து வரும் கம்பீர், தற்போது முழுக்க முழுக்க அரசியலில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

MOST READ: பருவமழை கொட்டபோகுது... வண்டி மேல கொஞ்சம் அக்கறை காட்டுங்க... என்ன பண்ணனும்னு தெரியுமா?

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

தற்போது கௌதம் கம்பீரின் தந்தைக்கு சொந்தமான டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களின் வீட்டில் இருந்து நேற்று (மே 28ம் தேதி), இந்த கார் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

ஆனால் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் டொயோட்டா பார்ச்சூனர் காரை கொள்ளையர்கள் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மத்திய டெல்லி பகுதியில் உள்ள ராஜேந்தர் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

கொள்ளையடிக்கப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார், கௌதம் கம்பீரின் தந்தை தீபக் கம்பீருக்கு சொந்தமானது ஆகும். அவரது வீட்டிற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரை, அதிகாலை 3 மணியளவில் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை விடிந்த பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கௌதம் கம்பீரின் குடும்பத்தினர் காரை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

இது தொடர்பாக அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் காவல் துறை தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கை ரேகைகளை எடுப்பதற்காக, தடய அறிவியல் துறையின் உதவியை காவல் துறையினர் நாடியுள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற விதம் வாகன உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

அலாரம் ஒலித்த நிலையிலும், கொள்ளையர்கள் வெற்றிகரமாக அதனை நிறுத்தி விட்டனர். கொள்ளையர்கள் வேறொரு காரில் வந்துள்ளனர். இந்த காரைதான் திருட போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பின் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். எனவே காரை திருடுவதற்கு அவர்கள் அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

சிசிடிவி வீடியோவை வைத்து பார்க்கையில் சுமார் 4-5 நிமிடங்களில் வேலையை முடித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் டொயோட்டா பார்ச்சூனர் கார் ஆகும். இதன் காரணமாக ஏராளமான ஆக்டிவ் மற்றும் பேஸிவ் பாதுகாப்பு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. இன்ஜின் இம்மொபலைசர் (Engine Immobiliser) வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

எனினும் கோட்களை மேட்ச் செய்யவும், காரை ஸ்டார்ட் செய்யவும் கொள்ளையர்கள் ஹை-டெக் டிவைஸ்கள் சிலவற்றை திருடர்கள் பயன்படுத்துகின்றனர். அத்தகைய உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. நன்கு வளர்ந்த நாடுகளில் சாவி தயாரிப்பாளர்களால் அத்தகைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாவியை காப்பி செய்ய மற்றொரு வழியும் உள்ளது.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

சர்வீஸ் ஸ்டேஷன் அல்லது அதுபோன்ற வேறு ஏதேனும் இடத்திற்கு செல்லும்போது சாவியை கொடுக்கும்படி கார் உரிமையாளர் கேட்டு கொள்ளப்படுவார். இதன் மூலமாக அதிநவீன அமைப்புகளை பயன்படுத்தி சாவிகளை காப்பி செய்ய முடியும். அதன்பிறகு அலாரம் ஒலிக்காமல் காரை ஸ்டார்ட் செய்யவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா?

டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களில் தெரிந்த ஆட்களை வைத்துள்ள திருடர்கள் சிலர் முறைகேடான ஆவணங்களை கொடுத்து, வாகனங்களின் டூப்ளிகேட் சாவிகளுக்கு ஆர்டர் செய்கின்றனர். இந்த டூப்ளிகேட் சாவிகளை பயன்படுத்தி காரை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கார் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது.

நீங்கள் டிராக்கிங் டிவைஸ்களை பயன்படுத்தினால் இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் காரை மீட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றின் விலையும் மிகவும் அதிகம் இல்லை என்பதால், கார் வைத்திருப்பவர்கள் முன்எச்சரிக்கையாக டிராக்கிங் டிவைஸ்களை பயன்படுத்தலாம். குறிப்பாக விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர்கள் இதனை பரிசீலிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 29, 2020, 19:53 [IST]
English summary
Toyota Fortuner SUV Of Former Cricketer And BJP MP Gautam Gambhir’s Father Stolen. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+