கருப்பு கலர் ஃபார்ச்சூனர் காரில் வலம் வரும் அழகு தேவதை! அவங்களா இது! உத்து பாத்ததும் மனசை பறிகொடுத்த இளசுகள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் பலரும் சொந்தமாக வைத்துள்ளனர். இதில், குறிப்பிடத்தகுந்த பிரபலங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிபாஷா பாசு (Bipasha Basu): பிரபல நடிகையான பிபாஷா பாசு, டைப் 2 (Type 2) டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வைத்துள்ளார். தளபதி விஜய் (Thalapathy Vijay) உடன் இணைந்து சச்சின் திரைப்படத்தில் நடித்த பிபாஷா பாசுவிடம் இருப்பது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகும்.

அமீஷா படேல் (Ameesha Patel): இவரும் பிரபலமான பாலிவுட் நடிகைதான். இவரிடமும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உள்ளது. மும்பை (Mumbai) நகரில், தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில், அமீஷா படேல் வலம் வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் சமீபத்தில் வேகமாக பரவியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நேஹா தூபியா (Neha Dhupia): மற்றொரு பிரபல நடிகையான நேஹா தூபியா, டைப் 2 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வைத்துள்ளார். இது க்ரே கலர் கார் ஆகும். நேஹா தூபியா அவரது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் அடிக்கடி வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் அவர் இந்த காரை எவ்வளவு நேசிக்கிறார்? என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

மிர்ணால் தாக்கூர் (Mrunal Thakur): துல்கர் சல்மான் (Dulquer Salmaan) உடன் இணைந்து நடித்த சீதா ராமம் (Sita Ramam) திரைப்படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ணால் தாக்கூர். இவரிடம் டைப் 3 (Type 3) டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உள்ளது. இது கருப்பு நிற கார் ஆகும்.
அர்ஜூன் ராம்பால் (Arjun Rampal): நடிகைகள் மட்டுமல்லாது, பிரபல நடிகர்களும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வைத்துள்ளனர். இதில், அர்ஜூன் ராம்பால் முக்கியமானவர். தயாரிப்பாளர் என்ற முகமும் இவருக்கு உண்டு. இவரிடம் இருப்பது வெள்ளை நிற டைப் 2 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகும்.
ஆமிர் கான் (Aamir Khan): அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, இந்தியா முழுக்க பிரபலமானவர் ஆமிர் கான். இவரிடம் இருப்பது சில்வர் நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஆகும். இதுதவிர டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Velfire) போன்ற கார்களும் அவரிடம் உள்ளன. இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை (Price), 33.43 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
எனவே பிரபல மனிதர்களால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்குவது மிகவும் எளிதான காரியம்தான். திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் தவிர, இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகளும் பலரும் கூட, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அதிகமாக விரும்புகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








