சத்தியமா இந்த சர்பிரைஸை எதிர்பார்த்திருக்க மாட்டாரு... கஸ்டமருக்கு டொயோட்டாவின் ஷாக்கிங் கிஃப்ட்!!

அமெரிக்காவில் 10 இலட்ச கிமீ தொலைவிற்கு ஓட்டிய காரை தொலைத்தவருக்கு டொயோட்டா நிறுவனம் புத்தம் புதிய காரை பரிசாக வழங்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எதற்காக இந்த பரிசு? பரிசை பெற்ற அந்த நபர் யார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

டொயோட்டாவின் கார்கள் விற்பனை நம் இந்தியாவில் சற்று சுமாராக இருப்பினும், உலகளவில் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் பிரபலமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் பல அமெரிக்கன் கார் நிறுவனங்களுக்கே டொயோட்டா டஃப் கொடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க மக்கள் உடன் டொயோட்டாவின் நெருங்கிய பிணைப்புதான். இதற்கு சாட்சியாக மற்றுமொரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

சூறாவளியில் காரை இழந்தவருக்கு டொயோட்டாவின் சர்பிரைஸ் கிஃப்ட்

அமெரிக்காவில் சில பகுதிகளை சமீபத்தில் ஐயன் சூறாவளி துவம்சம் செய்து போனது. கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில், கடற்கரை பகுதிகளில் துவங்கிய இந்த சூறாவளியில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இந்த ஐயன் சூறாவளியில் மார்க் மில்லர் என்பவர் தனது டொயோட்டா ஹைலேண்டர் காரை இழந்துள்ளார். இவருக்கே டொயோட்டா நிறுவனம் புதிய ஹைலேண்டர் காரை பரிசாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நாப்பிள்ஸ் நகரத்தில் உள்ள ஜெர்மயின் டொயோட்டா என்ற டீலர்ஷிப் மையம் மார்க் மில்லருக்கு இந்த பரிசை வழங்கியுள்ளது. மார்க் மில்லரும் இந்த பகுதியை சேர்ந்தவர்தான். சூறாவளியில் பலர் தங்களது டொயோட்டா கார்களை இழந்து இருப்பர். ஆனால் மார்க் மில்லரை மட்டும் டொயோட்டா அழைத்து பரிசு வழங்கி இருப்பதற்கு காரணம், மார்க் மில்லர் தனது 2006 ஹைலேண்டர் காரை 10 இலட்ச கிமீ தொலைவிற்கு ஓட்டியுள்ளார் என்பதாகும்.

10 இலட்ச கிமீ என்பது நிச்சயம் ஓர் நீண்ட பயணம் தான். இருந்தாலும், 10 இலட்ச கிமீ தொலைவிற்கு கார்களை இயக்கியவர்கள் உலகளவில் என்று பார்க்கும்போது அதிக பேர் இருக்கிறார்கள். இருப்பினும், மார்க் மில்லருக்கு பரிசாக புதிய கார் வழங்கப்பட்டு இருப்பதற்கு காரணம், மார்க் மில்லர் தொலைந்து போன தனது ஹைலேண்டர் காரை மேற்கூறப்பட்ட ஜெர்மயின் டொயோட்டா டீலர்ஷிப் மையத்தில்தான் அதன் வாழ்நாள் முழுக்க சர்வீஸ் செய்து வந்துள்ளார்.

சூறாவளியில் காரை இழந்தவருக்கு டொயோட்டாவின் சர்பிரைஸ் கிஃப்ட்

அத்துடன் அவ்வப்போது, தனது கார் இத்தனை இலட்ச கிமீ தொலைவு இயங்கியுள்ளது என்பது குறித்த விபரங்களையும் டீலர்ஷிப்பிடம் தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், தனது ஹைலேண்டர் கார் 5 இலட்ச கிமீ தொலைவிற்கு பயணித்துள்ளதாக மார்க் மில்லர் கூறியபோது, அவரை டீலர்ஷிப் மையத்திற்கு அழைத்த அதிகாரிகள் அவருக்கு பரிசாக ஏர் கூலரை வழங்கியுள்ளனர். அதேபோன்று, 10 இலட்ச கிமீ தொலைவு நிறைவையும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் ஃப்ளோரிடாவை புரட்டி போட்ட ஐயன் சூறாவளி மார்க் மில்லரின் 2006 ஹைலேண்டர் காரையும் புரட்டி போட்டுள்ளது. இந்த சம்பவத்தையும் அறிந்த ஜெர்மயின் டொயோட்டா டீலர்ஷிப் மையம் மார்க் மில்லருக்கு புத்தம் புதிய காரை வழங்க வேண்டும் என முடிவெத்து, பிராண்டின் புதிய 2023 ஹைலேண்டர் காரை பரிசாக வழங்கியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் தான் 2023 டொயோட்டா ஹைலேண்டர் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

மார்க் மில்லர் தனது 2006 ஹைலேண்டர் காரை 10 இலட்ச கிமீ தொலைவிற்கு பயன்படுத்தி வந்ததால்தான் இவருக்கு புதிய காரை பரிசாக வழங்கும் முடிவுக்கு டொயோட்டா வந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை, இந்த யோசனையில் இருந்த ஜெர்மயின் டொயோட்டா ஷோரூமுக்கு, அத்தகைய தரமான காரை மார்க் மில்லர் சூறாவளியில் இழந்துள்ளாரே என்ற பரிதாபமும் இணைந்து இத்தகைய பரிசை வழங்க வைத்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 14:13 [IST]
English summary
Toyota gifted all new 2023 highlander to man after knows he lost his car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+