பைக்கோட மோதினதுக்கே இந்த நிலைமையா! முகத்தை முழுமையாக இழந்த கார்! காரைவிட பைக் ரொம்ப ஸ்ட்ராங்!

பைக்குடன் ஏற்பட்ட மோதலில் கார் ஒன்று அதன் முகப்பு பகுதியையே முழுமையாக இழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பைக்குடன் ஏற்பட்ட விபத்தில் காரின் முன் பக்கம் முழுமையாக சிதைந்து போயிருக்கின்றது. மேலும், கார் இருக்கும் மோசமான நிலையை வைத்து பார்த்தால் பைக் நிலைமை இதைவிட மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், ஆச்சரியம் அளிக்கும் விதமாக அந்த பைக் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றது. விபத்தினால் சேதத்திற்கு ஆளாகி இருந்தாலும், காருடன் ஒப்பிடுகையில் அந்த பைக் எவ்வளவோ மேலான சேதங்களுக்கே ஆளாகி இருக்கின்றது.

இதை வெளிக்காட்டக் கூடிய காட்சிகளே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. விபத்தில் சிக்கி கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கும் அந்த கார் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் எந்த பைக்குடன் அது மோதலைச் சந்தித்து இந்த அளவிற்கு சேதத்திற்கு ஆளாகி இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Toyota glanza crashed into tvs radeon motorcycle

மோதலில் முன் பக்கத்தை முழுமையாக இழந்து இருப்பது டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா (Toyota Glanza) கார் மாடல் ஆகும். மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno) கார் மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார் மாடல் இதுவாகும். அதாவது, பலினோ கார் மாடலை குறிப்பிட்ட சில மாற்றங்களுக்கு உட்படுத்தி கிளான்ஸா எனும் பெயரில் டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் மாடலே பைக்குடனான விபத்தில் முன் பக்கத்தை முழுமையாக இழந்துள்ளது. இந்த கார் டிவிஎஸ் நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடலான ரேடியான் (TVS Radeon) உடனேயே மோதலைச் சந்தித்திருக்கின்றது. ஆமாங்க, இந்த பைக்குடன் மோதியதிலேயே கிளான்ஸா கார் கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது.

இரண்டு ஹெட்லைட்டுகள், பம்பர், கிரில், பான்னெட் என முன்பக்கம் மொத்தமும் விபத்தில் காலியாகி இருக்கின்றது. எஞ்சின் சேஸிஸ் வரை அடிவாங்கி இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. அதேநேரத்தில் டிவிஎஸ் ரேடியான் பைக்கோ காரைக் காட்டிலும் குறைவான சேதங்களுக்கே ஆளாகி உள்ளது. அதன் ஃபோர்க் பென்டாகி இருப்பது தெரிகின்றது.

இத்துடன், ஹெட்லைட் மற்றும் மட்குவார்டு உள்ளிட்டவையும் லேசான சேதங்களுக்கு ஆளாகி இருப்பது தெரிகின்றது. இத்தகைய குறைவான சேதங்களுக்கே அந்த கார் ஆளாகி இருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவின் பட்ஜெட் விலை பைக் மாடலான ரேடியான் அதிக உறுதியானது என்பது தெரிய வந்திருக்கின்றது.

தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஓர் டூ-வீலரே ரேடியான் ஆகும். இந்தியாவின் எளிய மக்களுக்கான இரண்டு சக்கர வாகனமாகவும் அது காட்சியளிக்கின்றது. இந்தியாவில் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். சென்னையில் ரூ. 69,598 என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது ஓர் 110 சிசி பைக் மாடல் ஆகும். இத்தகைய பைக்குடனான மோதலிலேயே கிளான்ஸா கார் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மடால்களில் கிளான்ஸாவும் ஒன்றாகும். ரூ. 6.86 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்தே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு வாகனங்களுக்கும் எப்படி விபத்துக்கு ஆளாகின என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்த விபத்தினால் யாருக்கும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. காரோ, பைக்கோ எதில் பயணித்தாலும் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்கிற பாடத்தையே இந்த விபத்து சம்பவம் நமக்கு கற்பித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 31, 2024, 5:00 [IST]
English summary
Toyota glanza crashed into a tvs radeon motorcycle showcasing build quality and safety
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+