வெளிநாட்டில் இருக்கும் மகன் இந்தியாவுக்கு வந்த நிலையை பார்த்து கண்கலங்கிய தாய்! கார் ஷோரூமில் ஆனந்த கண்ணீர்
பெற்றொருக்கு பரிசுகளை வழங்குவது என்பது எந்தவொரு மகன்/ மகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும். அவ்வாறு கொடுக்கும் பரிசுகளை சர்பிரைஸ் (Surprise)-ஆக பெற்றொருக்கு கொடுக்கும்போது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது பெற்றொருக்கு சர்பிரைஸ் பரிசாக டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) காரை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது ஷோரூமில் எடுக்கப்பட்ட வீடியோவில், மகன் மற்றும் பெற்றொருக்கு இடையே அன்பு மழை வழிந்தோடி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஜப்பானை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றான டொயோட்டா இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த மாடர்ன் கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) ஆகும். சுருக்கமாக, ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா (Brezza) காரை அடிப்படையாக கொண்டு ஹைரைடர் உருவாக்கப்பட்டது.

ஏனெனில், மார்க்கெட்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்ததால், அதனை பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக அதன் அடிப்படையில் ஹைரைடர் காரை டொயோட்டா உருவாக்கியது. பிரெஸ்ஸா அளவுக்கு இல்லையென்றாலும், ஹைரைடர் காரின் விற்பனையும் ஓரளவிற்கு நல்லப்படியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, முதல்முறையாக காரை வாங்கும் இளம் தலைமுறையினர் அதிகமாக ஹைரைடரை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு சாட்சியாக, இங்கு ஒரு இளைஞர் பிராண்ட்-நியூ டொயோட்டா ஹைரைடர் காரை வாங்கியுள்ளார். இதனை அவர் தனக்காக வாங்கவில்லை; மாறாக தனது பெற்றோருக்காக வாங்கி உள்ளார். இதைவிட இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புதியதாக வாங்கிய காரை இந்த இளைஞர் தனது பெற்றொருக்கு வழங்கிய விதம் ஆகும்.

கேரளாவை சேர்ந்த இந்த இளைஞர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர் கேரளாவில் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். பெற்றோருக்கு புதியதாக கார் வாங்கி கொடுக்க இந்த இளைஞர் விரும்பியுள்ளார். அதன்படி, பிராண்ட்-நியூ ஹைரைடர் காரையும் இணையம் வாயிலாக முன்பதிவு செய்துள்ளார். புக் செய்த காரின் டெலிவிரி தேதி அறிவிக்கப்பட்டது. அதனை தனது பெற்றோரிடம் இந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அவர்களும் அந்த நாளில் ஷோரூமுக்கு காரை டெலிவிரி பெற சென்றுள்ளனர். இந்த நேரத்தில் காரை வாங்கிக் கொடுத்த மகன் இந்த இடத்தில் இல்லையே என்கிற மன வருத்தம் மட்டும் அவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்த சிறிய மன வருத்தத்துடன் ஷோரூமுக்கு சென்றவர்களுக்கு, முகத்தில் முககவசம் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் ஷோரூமில் பணியாற்றுபவரை போல் பிராண்ட்-நியூ ஹைரைடர் காருக்கான சாவியை வழங்கியுள்ளார்.

அதுவரையில், தங்களது கையில் காரின் சாவியை வழங்கியவர் தனது மகன் என்பது அந்த பெற்றோருக்கு தெரியவில்லை. காரின் சாவியை வழங்கியபோது சுற்றியிருந்தவர்கள் போட்டோ எடுக்க ஆரம்பித்துள்ளனர். காரை டெலிவிரி பெற வந்த தம்பதியும் ஏதோ ஒரு இளைஞர் உடன் போட்டோ எடுத்துக் கொள்வதுபோல் காரின் சாவியை பெற்றுக் கொண்டப்படி போட்டோவுக்கு சாதாரணமாக போஸ் கொடுத்துள்ளனர்.
அப்போது திடீரென முகத்தை மறைத்திருந்த இளைஞர் தனது வேசத்தை களைத்த போது, அவரது தாய் தனது மகனை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டார். பின்னர், மகனை கட்டியணைத்து அன்பு மழையை பொழிய ஆரம்பித்துள்ளார். இது சுற்றியிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த நிகழ்வை அப்படியே வீடியோவாக காட்சிப்படுத்தி சம்பந்தப்பட்ட டொயோட்டா ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்ப்போரை ஆனந்த கண்ணீர்விட வைத்தது மட்டுமின்றி, இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த அழகிய மலையாள குடும்பம் வாங்கிருக்கும் டொயோட்டா ஹைரைடர் காரை வீடியோவில் காண முடியவில்லை. இந்த டொயோட்டா காரின் விலைகள் ரூ.11.14 லட்சத்தில் இருந்து துவங்கினாலும், ஹைரைடரை வாங்குவதற்கு குறைந்தது ரூ.12.50 லட்சத்தை ஆவது செலவு செய்ய வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications









