டொயோட்டா இன்னோவாவை வாங்க மட்டும் எப்பவும் ஒரு கூட்டம் இருக்குனு இத பார்த்தாலே புரியும்!!

டொயோட்டா இன்னோவா (Toyota Innova), இந்தியா உள்பட உலகளவில் தரமான மற்றும் வலிமையான கார் என சொல்லலாம். இதனாலேயே, இந்தியாவில் டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களுக்கு மட்டும் எப்போதுமே வரவேற்பு இருப்பது வழக்கம். இந்த நிலையில், இன்னோவா காரின் வலிமையை பறைச்சாற்றும் வகையில், இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் 3 கார்களை டொயோட்டா இன்னோவா காரில் ஒன்றாக கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார் பிரேக்ஸ் டவுன் (Breaks Down) ஆகி நிற்பது வழக்கமான ஒன்றே. இன்னும் சொல்லப்போனால், சமீப காலமாக இந்த பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நடுவழியில் கார் பிரேக்ஸ் டவுன் ஆகி நின்றால், அதில் இருந்து மீள 3 வழிகள் தான் உள்ளன. ஒன்று, உங்களுக்கு நன்றாக மெக்கானிக் வேலை தெரியும் என்றால் பழுதை சரிச்செய்ய பார்க்கலாம். அல்லது, அருகில் உள்ளவர்களை அழைக்கலாம்.

toyota innova used to tow

2வது வழி, கார் டீலர்ஷிப் ஷோரூமின் சாலையோர உதவி (Roadside Assistance)-ஐ பெறலாம். 24/7 கிடைக்ககூடிய இந்த உதவியை பெரும்பாலான நேரங்களில் பெற்றுவிட முடிந்தாலும், சில நேரங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. அத்தகைய நேரத்தில்தான் வேறு வழியில்லாமல் 3வது வழியை பின்பற்ற வேண்டியதாகிவிடும். அந்த 3வது வழி வேறு ஒன்றுமில்லை, காரை டோ (Tow) செய்து அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்வதாகும்.

இதற்கு உங்களுக்கு வேறொரு வாகனத்தின் உதவி வேண்டும். நெடுஞ்சாலைகளில் கார்கள் டோ செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை இந்தியாவில் பரவலாக காண முடியும். ஆனால், ஒரே நேரத்தில் 3 கார்கள் டோ செய்யப்பட்டு இழுத்து செல்லப்படுவதை மிகவும் அரிதாகவே காண முடியும். அவ்வாறான அரிதான ஒரு நிகழ்வு தான், இந்தியாவில் ஒரு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

toyota innova used to tow

இருப்பினும், இந்தியாவில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது என்பதை அறிய முடியவில்லை. வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து பார்த்தால், தென்னிந்தியாவில் ஏதேனும் ஒரு நெடுஞ்சாலையில் நடந்திருக்கலாம் என யூகிக்கிறோம். இந்த சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டியது, 3 கார்களை ஒரே நேரத்தில் இழுத்துச் சென்ற டொயோட்டா இன்னோவா காரின் வலிமையை ஆகும்.

பெரும்பாலும் இவ்வாறு கார்களை இழுத்துச் செல்ல அதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டோ வாகனத்தை தான் பயன்படுத்துவது வழக்கம். அந்த வாகனத்தில் கூட ஒரு காரை தான் கட்டி இழுத்து செல்வார்கள். சில நேரங்களில் டிராக்டர் அல்லது கனரக வாகனங்களை கூட இவ்வாறு கார்களை இழுத்துச் செல்வதற்காக பயன்படுத்துவார்கள். ஆனால், கார்களை இழுத்துச் செல்ல காரை பயன்படுத்துவது பரவலாக பார்க்க முடியாத நிகழ்வாகும்.

இந்த டொயோட்டா இன்னோவா காருடன் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் கயிறு மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹூண்டாய் காருடன் மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) காரும், அதலில் இருந்து மாருதி சுஸுகி ஜென் எஸ்டிலோ (Maruti Suzuki Zen Estilo) காரும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 3 காரின் எடையை இழுத்து சென்றது இன்னோவா கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வில் முழுக்க முழுக்க டொயோட்டா இன்னோவா காரின் வலிமையை தான் நம்மால் பார்க்க முடிகிறது. இழுத்துச் செல்லப்பட்ட 3 கார்களும் எடை குறைவானவை என்றாலும், அவற்றை நெடுஞ்சாலையில் ஒரே நேர்த்தியாக கொண்டு செல்வது மிகவும் சிரமம். ஆதலால், இந்த நிகழ்வில் நாம் இன்னோவா கார் டிரைவரையும் பாராட்டி ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 18:39 [IST]
English summary
Toyota innova car used to tow 3 cars on highway in india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+