டொயோட்டா இன்னோவா காரை இவ்ளோ லக்சூரியா மாத்த முடியுமா!.. இனி பென்ஸ், ஆடி கார்கள் விற்பனையான மாதிரிதான்!!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்று என டொயோட்டா இன்னோவா (Toyota Innova)-வை சொல்லலாம். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். குறிப்பாக, அரசியல்வாதிகள் மற்றும் அரசின் பெரும் பொருப்பில் இருப்பவர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி புதிதாக கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் உள்ளிட்ட பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். அதிக இட வசதி மற்றும் அதிக இருக்கைகளைக் கொண்ட காராக இது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுமட்டுமல்ல அதிக காலம் நீடித்து உழைக்கும் திறன் கொண்டதாகவும் இன்னோவா கார்கள் அறியப்படுகின்றன. இதனாலேயே இந்தியாவில் இதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இத்தகைய காரையே விலை உயர்ந்த லக்சூரி கார்களுக்கு இணையானதாக மாற்றி இருக்கின்றனர் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர். இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Toyota innova crysta modified

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா இரண்டு வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) ஆகியவையே அவை ஆகும். இன்னோவா கிரிஸ்டா டீசல் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் இன்னோவா கிரிஸ்டாவை ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காராக மாற்றியிருக்கின்றனர். லெக்சஸ் பாடி கிட்டை பயன்படுத்தியே இந்த காரை புதிய மற்றும் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்ததாக மாற்றி இருக்கின்றனர். இதன் இருக்கைகள், ஸ்டியரிங் வீல் கர் மற்றும் டேஷ்போர்டு என அனைத்தையும் மாற்றி இருக்கின்றனர்.

இதனால் பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் பென்ஸ் (Benz) போன்ற நிறுவனங்களின் கார்களுக்கு டஃப் கொடுக்கும் லுக்கில் இன்னோவா கிரிஸ்டாவின் உட்பக்கம் மாறியிருக்கின்றது. இதேபோல், வெளிப்புற தோற்றமும் மிகுந்த கவர்ச்சியானதாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றப்பட்டு இருக்கும் கிரில் வேற லெவல் அழகை இந்த காருக்கு வழங்கம் வகையில் அமைந்திருக்கின்றது.

அத்துடன், ஹெட்லைட் போன்றவற்றையும் இவர்கள் மாற்றி இருக்கின்றனர். பிஎம்டபிள்யூ கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற எல்இடி டிஆர்எல் மற்றும் புரஜெக்டர் வகை ஹெட்லைட்டே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கம் ஆகியவையும் மாற்றப்பட்டு இருக்கின்றது.

Luxurious modifications to toyota innova crysta

இதேபோல் காரின் உட்பக்கத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் காணப்படுவது ஸ்டார்லைட் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல ஆம்பியன்ட் எல்இடி லைட்டும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்தே இன்னோவா கிரிஸ்டா காரை அட்வான்ஸ்டு அம்சங்கள் நிறைந்த ஆடம்பர கார்களுக்கு இணையானதாக மாற்றியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாதிரியான அழகுப்படுத்தல் வேலை மட்டுமே இந்த காரில் பார்க்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சின் விஷயத்தில் எந்த வேலையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை உண்மை தன்மை மாறுகின்ற வகையில் மாற்றுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

அதேவேளையில், பலரின் ஆடம்பர கார் தேவையை இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன்களே பூர்த்தி செய்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த மாதிரியான சூழலிலேயே ஆடம்பர கார்களுக்கு இணையாக இன்னோவா கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான செயல்கள் இந்தியாவில் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களின் விற்பனையில் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 23:40 [IST]
English summary
Toyota innova crysta gets remarkable modifications for a luxurious experience
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X