விசேஷ பாடி கிட்டுடன் அட்டகாசமாக மாறிய புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா!

Written By:

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. பல லட்சங்கள் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக இருக்கிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் பிரிமியம் பிராண்டாக மாறிப் போயிருக்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கூடுதல் பிரமியம் தரும் முயற்சியை கிட் அப் என்ற நிறுவனம் செய்திருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான புதிய பாடி கிட் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. அந்த பாடி கிட்டில் இன்னோவா க்ரிஸ்ட்டா கார் எப்படியிருக்கிறது என்பதை பார்த்து, ஆர்டர் செய்யாலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.

 முதல் கார்

முதல் கார்

பல லட்சம் இன்னோவா காரை சில லட்சங்கள் கொடுத்து சொகுசு காராக மாற்றிக் கொண்ட கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில், முதல்முறையாக புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான பாடி கிட் இதுவாக கருதப்படுகிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இயல்பான தோற்றம் குலைந்துவிடாமலும், மறுபக்கம் வித்தியாசத்தையும், பிரத்யேகமாக இருக்கும் விதத்திலும் இந்த பாடி கிட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

முகப்பு

முகப்பு

முன்புறத்தில் ஹெட்லைட் வரையிலும் அதிக வித்தியாசங்கள் இல்லை. அதற்கு கீழே புதிய பம்பர் கொடுக்கப்பட்டு வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

மேலும், பம்பர் அமைப்பும் மிக தாழ்வாக மாற்றப்பட்டிருக்கிறது. பனி விளக்குகளை சுற்றி, எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 புதிய வீல்கள்

புதிய வீல்கள்

இந்த பாடி கிட்டை வாங்குவோர்க்கு பிரத்யேகமான 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்படுகிறது. இது காரின் அழகுக்கு கூடுதல் வசீகரத்தையும், கம்பீரத்தையும் பெற்றுத் தருகிறது. மேலும், தாழ்வான பம்பர் மற்றும் சைடு ஸ்கர்ட்டுகளால் ஏற்படும் தரை இடைவெளி குறைவை சமாளிக்க இது ஓரளவு உதவும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

பக்கவாட்டில் சைடு ஸ்கர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், காரின் உயரம் குறைவாக தெரிகிறது. எனவே, பக்கவாட்டில் பார்ப்பதற்கு வேன் போன்று இருக்கிறது. இதுபோன்று, சிறிய, சிறிய மாற்றங்கள் மூலமாக மிக சிறப்பாக இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு கூட்டியிருக்கின்றனர்.

 பின்புற மாற்றங்கள்

பின்புற மாற்றங்கள்

இரண்டு இரட்டைக் குழல் சைலென்சர்கள் கொடுக்கப்பட்டிருப்பது காருக்கு கூடுதல் பொலிவை தந்துள்ளது. பின்புற பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை செய்யாமல் சாதுர்யமாக செயல்பட்டிருக்கின்றனர்.

 இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் கதவுகள், டேஷ்போர்டு, இருக்கைகளில் உயர்தர லெதர் கவர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், சொகுசு கார் போன்று மாறியிருக்கிறது.

சிறப்பு

சிறப்பு

கண்ணா பின்னாவென்று இல்லாமல், மிக நாசூக்காக மாற்றியிருக்கின்றனர். அதாவது, கார் தயாரிப்பு நிறுவனத்திலேயே கொடுக்கப்பட்ட இன்டீரியர் அமைப்பு போல இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவது இருக்கை பயணிகளுக்காகதனித் தனி மானிட்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆடியோ சிஸ்டம்

ஆடியோ சிஸ்டம்

சப் ஊஃபர் மற்றும் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் கூடிய சிறப்பான ஆடியோ சிஸ்டம் இருக்கின்றது. இது ஒவ்வொரு பயணத்தையும் மிகச் சிறப்பானதாக மாற்றும்.

விலை

விலை

விலை விபரம் வெளியிடப்படவில்லை. எனினும், Kit up நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கம் வழியாக தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும்.

  
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Toyota Innova Crysta Modified — Scooped Inside Out!
Story first published: Friday, August 5, 2016, 16:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark