திடீர்னு பின்னோக்கி ஓடிய இன்னோவா கார்! இப்படி ஆனதுக்கு இதுதான் காரணமா! எல்லாரும் கதிகலங்கி போய்ட்டாங்க!

டிரைவர்களின் கவனக்குறைவால் நடைபெற்ற சாலை விபத்துக்கள் (Road Accidents) தொடர்பான வீடியோக்களை (Videos) நாம் பலமுறை பார்த்துள்ளோம். அலட்சியமாக ஓட்டியது அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்தால் கவனம் சிதறியது ஆகியவையே இந்த சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

வாகனம் ஓட்டும்போது மட்டுமல்லாது, வாகனத்தை பார்க்கிங் செய்யும்போதும் கூட ஒரு சிலர் அலட்சியமாக இருக்கின்றனர். இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கேரள மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆனால் பைக் ரைடர் ஒருவர் சரியான நேரத்தில் தலையிட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Toyota Innova Crysta Roll Backwards

இந்த சம்பவம் நடைபெற்றபோது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகள் அனைத்தும் அப்படியே பதிவாகியுள்ளன. அந்த வைரல் வீடியோ (Viral Video), தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சாலையில் நிறைய வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஒன்று சாலையில் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. ஏதோ ஒரு வேலை காரணமாக வங்கி ஒன்றின் முன்பு, அதன் டிரைவர் காரை நிறுத்தியிருந்தார்.

Toyota Innova Crysta Roll Backwards

ஆனால் துரதிருஷ்டவசமாக பார்க்கிங் பிரேக்கை (Parking Brake) போட அவர் மறந்து விட்டார். அவர் இறங்கி வெளியே சென்றதும், கார் திடீரென பின்னோக்கி வர ஆரம்பித்து விட்டது. அப்போது காருக்கு அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், உடனடியாக கதவை திறந்து, காரை நிறுத்த முயற்சி செய்தார்.

ஆனால் கார் வேகம் எடுத்து விட்டதால், அவரால் நிறுத்த முடியவில்லை. இதனாலும், இடையில் இடைவெளி இருந்த காரணத்தாலும், சாலையின் அடுத்த பக்கத்திற்கே கார் சென்று விட்டது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த சுதீஷ் என்பவர், டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாத நேரத்தில் கார் ஒன்று தானாக பின்னோக்கி சென்று கொண்டிருப்பதை கவனித்தார்.

உடனடியாக பைக்கை நிறுத்தி விட்டு காரை நோக்கி ஓடிய அவர், கதவை திறந்து, பார்க்கிங் பிரேக்கை போட்டு காரை நிறுத்த உதவினார். காருக்குள் நுழைந்து அதை நிறுத்தியவுடன், முன்னோக்கி ஓட்டி செல்வதற்கும் சுதீஷ் உதவி செய்துள்ளார். கார் நின்றவுடன், அதை சுற்றிலும் ஏராளமான மக்கள் திரள்வதுடன் வீடியோ முடிவடைந்து விடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுதீஷ் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம். சாலை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நிலையிலும், அதிர்ஷ்டவசமாக இந்த காரால் விபத்து ஏற்படவில்லை. காரை பார்க்கிங் செய்யும்போது, பார்க்கிங் பிரேக்கை போட மறக்காதீர்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 12:24 [IST]
English summary
Toyota innova crysta roll backwards after driver forgets to engage parking brake viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+