டொயோட்டா இன்னோவா கார் வெறும் சோப்பு டப்பாதானா! வைரலாக பரவும் வீடியோவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). அறிமுகதே தேவையில்லை என்னும் அளவிற்கு, இந்தியர்களின் மனதிற்கு மிக நெருக்கமான கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால், பலரும் பலவிதமான பதில்களை சொல்வார்கள். இதில் கட்டுமான தரமும் (Build Quality) ஒன்றாகும். ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் கட்டுமான தரத்தை தற்போது பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோதான் (Viral Video) இதற்கு காரணம்.

இந்த வீடியோவில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மேற்கூரையின் மீது ஒருவர் அமர்வதை நம்மால் காண முடிகிறது. ஆனால் அவரது எடை தாங்காமல் மேற்கூரை வளைந்து விடுகிறது. அதாவது மேற்கூரையில் பள்ளம் போன்று ஆகி விட்டது. எனவே அந்த நபர் உடனடியாக காரில் இருந்து இறங்கி விட்டார்.
இதன்பின் ஒருவர் காரின் உள்ளே இருந்து மேற்கூரையை பலமாக தட்டுகிறார். இதன்பின் காரின் மேற்கூரை தனது உண்மையான வடிவத்திற்கு வந்து விட்டது. கோவாவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த பலரும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் கட்டுமான தரத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக காரின் மேற்கூரை என்பது நாம் அமர்வதற்காக வழங்கப்படவில்லை. காரின் உள்ளே வழங்கப்பட்டுள்ள இருக்கைகளில்தான் நாம் அமர வேண்டும். காரின் மேற்கூரை என்பது வெயில், மழை போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கார்களில் மெல்லிய உலோக தாள்களின் மூலமாகவே மேற்கூரையை வடிவமைத்திருப்பார்கள். எனவே காரின் மேற்கூரையில் அமர்வதை நாம் தவிர்க்க வேண்டும். எனவே சமூக வலை தளங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டு வருவதை போல், ஒருவர் அமர்ந்ததால் மேற்கூரை வளைந்ததற்கும், கட்டுமான தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதிக எடையை தாங்கும் வகையில் கார்களின் மேற்கூரைகள் வடிவமைக்கப்படுவதில்லை. எனவே அதன் மீது அமர்வதை தவிர்த்து விடுங்கள். அதுதான் உங்களுக்கும், உங்கள் காருக்கும் நல்லது. காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பதை பலரும் விரும்புவதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியமான காரணம்.
இந்த காரை தயாரித்த டொயோட்டா நிறுவனத்தை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற புதிய மாடல் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஹைப்ரிட் (Hybrid) ரகத்தை சேர்ந்த கார் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications