தூத்துக்குடி அருகே கார் மோதி அந்தரத்தில் பறந்த இளைஞர்... பதறவைக்கும் வீடியோ..!
வாலிபர் அவரசமாக ரோட்டை கடப்பதற்காக வேகமாக ஓடி வருகிறார். பாதிரோட்டை கடந்த இவர் ரோட்டின் அடுத்த பாதிக்கு செல்லும் போது வாகனங்கள் வருவதை சரியாக கவனிக்கவில்லை.
இந்தியாவில் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இவற்றிற்கு முக்கிய காரணம் சரியாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது தான்.

இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரு வாலிபர் மீது இன்னோவா கார் மோதிய விபத்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நீங்கள் கீழே பாருங்கள்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரோட்டை வேகமாக கடக்க முயன்ற சுமார் 46 வயது மதிக்க தக்க ஒருவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் அவர் தூக்கி விசப்பட்டார். பின்னர் அவர் மீது கார் ஏறி இறங்கியது. இந்த பதற வைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சியின் படி வாலிபர் அவரசமாக ரோட்டை கடப்பதற்காக வேகமாக ஓடி வருகிறார். பாதிரோட்டை கடந்த இவர் ரோட்டின் அடுத்த பாதிக்கு செல்லும் போது வாகனங்கள் வருவதை சரியாக கவனிக்கவில்லை.

அப்பொழுது அந்த வழியாக இன்னோவா கார் ஓன்று வந்து கொண்டிருந்தது. இது எதிர்பாராத விதமாக ரோட்டை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது. ரோட்டை கடக்க முயன்ற வாலிபரும் காரை கவனித்த சில நொடிகளிலே கார் அருகில் வந்து விட்டாதால் கண்ணிமைக்கும் நொடியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கார் மோதியில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் மிக வேகமாக ரோட்டில் பறந்து சென்று விழுந்தார். விழுந்த வேகத்தில் சில அடி துாரம் ரோட்டில் தரதர வென இழுத்து செல்லப்டார்.

இந்த விபத்து சந்தித்த அதிர்ச்சியில் இருந்து என்ன செய்வது என தெரியாமல் காரின் டிரைவர் திணறியுள்ளார். அந்த நேரத்தில் ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரின் மீது கார் ஏறியது. இந்த விபத்து காட்சி மிகவும் கொடுரமாக இருந்தது.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய வாலிபர் உயிருக்கு என்ன ஆனது? இந்த விபத்து சம்மந்தமாக போலீசார் இந்த கார் டிரைவரை பிடித்தார்களா? என்பது குறித்த முழுமையான விபரங்கள் தெரியவில்லை.

இந்த விபத்திற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் சாலையை கடக்க முயனற்வர் தான். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும் என அறிந்தும் அவர் வேகமாக ரோட்டை கடக்க முயற்சி செய்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது. இதனால் தான் விபத்து நிகழ்ந்துள்ளது.

அதே நேரத்தில் என்னதான் காரில் வேகமாக வந்தாலும் டிரைவர் காரின் குறுக்கே யாரும் வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும் அந்த வாலிபர் வேகமாக வருவதை அவர் முன்பே கவனித்திருந்தால் காரை நிறுத்த முயற்சித்திருக்கலாம்.

மேலும் விபத்து நடந்த பின்பும் டிரைவர் அந்த வாலிபரின் மீது காரை ஏற்றி இருக்கிறார். இது பெரும்பாலும் விபத்து நடந்த அதிர்ச்சியில் டிரைவர் உரைந்திருக்க கூடும். அதுவும் கார் டிரைவரின் தவறுதான்.

சாலை விதிகளை மதிப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்பது இந்த வீடியோவில் இருந்தே தெரிகிறது. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உயிர் போகும் அபாயம் கூட இருக்கிறது. இனிமேலாவது மக்கள் மத்தியில் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








