நிதி ஒதுக்கியாச்சு!! மாநில அமைச்சர்களுக்கு இன்னோவா கார் பரிசு - எதற்காக தெரியுமா?

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) என்ற ஹைப்ரீட் கார்களை தனது மாநில அமைச்சர்களுக்கு வழங்க ஓர் மாநில அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. எந்த மாநில அரசாங்கம் அது? அந்த மாநில அமைச்சர்களுக்கு வழங்கப்படும் இன்னோவா ஹைகிராஸ் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஓர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பெரும்பாலும் சொகுசு கார்களையே பயன்படுத்துகின்றனர். மாநில அரசாங்கத்தின் துறை வாரியாக கவனித்துக் கொள்ளும் அமைச்சர்களுக்கு அரசாங்கம் சார்பில் அரசு வாகனமாக கார்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றே. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்க போவது, அமைச்சர்களுக்கு பரிசாக கார்கள் வழங்கப்படுவதை பற்றி ஆகும்.

cars ordered for karnataka ministers

இந்த பரிசை மாநில அமைச்சர்களுக்கு வழங்குவது நம் அண்டை மாநிலமான கர்நாடகா ஆகும். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் நடந்தது. சித்தராம்மையா கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் ஆனார். முக்கிய ஐந்து உத்தரவாதங்களை அளித்ததன் மூலம் சித்தராமைய்யா தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் அமைந்துள்ளது.

ஆனால் உண்மையில், அந்த 5 உத்தரவாதங்களை நிறைவேற்றவும், பெரிய வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டுவதிலும் கர்நாடகா மாநில அரசு சிரமப்பட்டு வருவதாக கூறப்படும் தற்போதைய சூழலில், கர்நாடக மாநில அமைச்சர்களுக்கு வழங்க 33 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் கார்களை கர்நாடக மாநில அரசாங்கம் ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ரூ.9.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

cars ordered for karnataka ministers

இந்த இன்னோவா கார்கள் அமைச்சர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அலுவலக வாகனங்கள் என்பது மட்டுமின்றி, ஆட்சி அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 'ஸ்பெஷல் பரிசு' ஆக வழங்கப்படுகின்றன. புதிய ஆட்சி அமைந்த பின் கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு புதிய கார்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றே. ஆனால், பெரும்பாலும் அவை பதவி பிரமாணம் செய்யப்பட்ட பின் வழங்கப்படும்.

ஆனால், இம்முறை ஆட்சி அமைக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து வழங்கப்படுகிறது. இந்த ஆர்டரை கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை பிறப்பித்துள்ளது. அதன்பின் இதற்கான அனுமதியை கோரி மாநில நிதித் துறையிடம் விண்ணப்பம் சென்றது. இதனை தொடர்ந்து, கர்நாடக முதல்வரின் கவனத்தின் பேரில், 33 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்களுக்கான ஆர்டர் தகுந்த அதிகாரிகளிடம் சென்றுள்ளது.

cars ordered for karnataka ministers

33 இன்னோவா ஹைகிராஸ் கார்களுக்கு ரூ.9.9 கோடி என்றால், கார் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. டொயோட்டாவின் ஹைப்ரீட் காரான இன்னோவா ஹைகிராஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.19.67 லட்சத்தில் இருந்து ரூ.30.26 லட்சம் வரையில் உள்ளன. ரூ.19.67 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே இன்னோவா ஹைகிராஸ் கிடைக்கும்.

ஹைப்ரீட் தேர்வில் இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஹைப்ரீட் தேர்வில் இன்னோவா ஹைகிராஸ் காரில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 186 பிஎச்பி வரையில் இயக்க ஆற்றலை வழங்கும் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரில் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாநில அமைச்சர்களுக்கு பரிசாக வழங்க டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை தேர்வு செய்திருப்பது மிக அருமையான முடிவாகும். ஏனெனில் இந்த கார்களில் மைலேஜ் அதிகமாக கிடைப்பது மட்டுமின்றி, பெட்ரோல் தேவையும் குறைவாக இருக்கிறது. இதனால் எலக்ட்ரிக்கை நோக்கிய மத்திய அரசின் கொள்கையிலும் பங்கு வகிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 2, 2023, 16:20 [IST]
English summary
Toyota innova hycross cars ordered for karnataka ministers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X