கார் உற்பத்தி நிறுவனம் டொயோட்டாவையே மிரள விட்டுட்டாங்க.. செய்தது சின்ன மாற்றம்.. கிடைத்ததோ 35 கிமீ மைலேஜ்!
இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எம்பிவி (MPV) ரக கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)-ம் ஒன்றாகும். இந்த காரை அரசியல்வாதிகளின் பிரியமான கார் மாடல் என்று கூறலாம். இதுமட்டும் அல்ல லாங் டிரிப் அதிகம் செல்வோரின் முதல் நிலை தேர்வாக இந்த கார் மாடலே இருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே வழக்கமாக வழங்குவதைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இந்தியாவில் மாற்றி இருக்கின்றனர்.
இந்த கார் மாடலின் ஹைபிரிட் அம்சம் கொண்ட வெர்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.24 கிமீ வரை மைலேஜ் தரும். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த இன்னோவா ஹைகிராஸ் 35 கிமீ வரையில் மைலேஜ் தரக் கூடியதாக மாறி இருக்கின்றது. இதுவே அந்த காரை தயாரிக்கும் டொயோட்டா நிறுவனத்திற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

வேற ஒன்னுமில்லைங்க வழக்கமாக பெட்ரோலில் ஓடிக் கொண்டிருந்த கார் மாடலை தற்போது சிஎன்ஜி-இல் இயங்குகின்ற வகையில் அவர்கள் மாற்றி இருக்கின்றனர். இதன் விளைவாகவே இன்னோவா ஹைகிராஸ் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாறி இருக்கின்றது. இந்தியாவில் சிஎன்ஜி ஆப்ஷனில் இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்தே கிட்டை வாங்கி அக்காரை சிஎன்ஜி வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இவ்வாறு ஹைபிரிட் அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் கார் மாடல் சிஎன்ஜி வாகனமாக மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். சாய் ஃப்யூவல் வதோதரா எனும் சிஎன்ஜி பொருத்தும் நிறுவனத்தாலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த காருக்கான சிஎன்ஜி கருவிகள் யூரோ கேஸ் போலந்தில் இருந்து ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பிரத்யேக கிட் தற்போது பொருத்தப்பட்ட நிலையிலேயே ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அந்த கார் 35 கிமீ வரை மைலேஜ் தரக் கூடியதாக மாறி இருக்கின்றது.
இந்த சிஎன்ஜி கிட் உடன் இசியூ, இசிஎம் மற்றும் சிஎன்ஜி பேரிங் - ரெட்யூசர் ஆகிய கருவிகளும் வந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. சிஎன்ஜி கிட்டை பொருத்தியதன் விளைவாகவே இந்த இன்னோவா ஹைகிராஸ் காரின் பூட் ஸ்பேஸ் மேலும் சிறியதாக மாறியிருக்கின்றது. ஆகையால், இதன் உரிமையாளரால் பெரிய அளவில் லக்கேஜ்களை பின்னால் வைக்க முடியாது.
சிஎன்ஜி கார்களில் காணப்படும் மிகப் பெரிய சிக்கல்களில் இதுவும் ஒன்றாகும். இதனால்தான் டாடா மோட்டார்ஸ் இரண்டு சிறிய சிஎன்ஜி சிலிண்டர்களை அதன் கார்களில் வழங்கத் தொடங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இந்த காரில் ஒரே சிலிண்டர் சற்றே பெரியதாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதனாலேயே பூட் ஸ்பேஸ் மிகப் பெரிய அளவில் பற்றாக்குறையாக மாறியிருக்கின்றது. ஆனால், பயணிகள் அமர்ந்து பயணிப்பதில் எந்த பாதிப்பும் இந்த காரில் ஏற்படவில்லை. 7 பேர் வரை இப்போதும் அமர்ந்து பயணிக்க முடியும். இன்னோவா ஹைகிராஸ் கார சிஎன்ஜி வாகனமாக மாற்றியதற்கு எவ்வளவு செலவானது என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு லட்சம் ரூபாய் வரை இன்னோவா ஹைகிராஸ் காரை சிஎன்ஜி வாகனமாக மாற்ற செலவிட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. வழக்கமாக ஓர் பெட்ரோல் காரை சிஎன்ஜி வாகனமாக மாற்ற ரூ. 40 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும். இது ஓர் ஸ்பெஷல் கிட் என்பதால் இந்த அதிகபட்ச செலவை அது வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








