ஸ்விஃப்ட் காரால் சாலையில் புரண்ட இன்னோவா.. எல்லாரும் இந்த காருதான் வேணும்னு அடம் பிடிக்க போறாங்க..
இந்திய சாலைகளில் அரங்கேறும் மிக கொடிய நிகழ்வுகளில் ஒன்றாக விபத்துகள் இருக்கின்றன. யாரும் இதை வேண்டும் என்றே விரும்பி செய்வதில்லை. எதிர்பாராத விதமாகவே தவிர்க்க முடியாத சூழலில் அது அரங்கேறிவிடுகின்றது. ஆனால், இத்தகைய விபத்துகளின்போது நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமானது.
எனவேதான் கார் உற்பத்தியாளர்கள் அவர்களின் தயாரிப்பை அதிக பாதுகாப்பை பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கின்றனர். அந்தவகையில், விபத்தின்போது பயணிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்குவதில் பெயர்போன பிராண்டா டாடா மோட்டார்ஸ் இருக்கின்றது. இதேபோல், இந்தியாவில் இன்னும் சில பிராண்டுகளும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் வகையில் தன்னுடைய வாகனங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றாக டொயோட்டா மாறி இருப்பதே இப்போது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான இன்னோவா, மிக மோசமான விபத்தில் சிக்கிய பின்னரும் அதில் இருந்து பயணி மிகவும் பத்திரமாக காரை விட்டு வெளியேறி இருக்கின்றார். கேரளா மாநிலத்திலேயே இந்த மோசமான விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
டொயோட்டா இன்னோவாவை ஓட்டி வந்தவராலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கவனக்குறைவாக அவர் வாகனத்தை ஓட்டி வந்ததன் விளைவாக, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மோத நேரிட்டிருக்கின்றது. இதன் காரணமாக சாலையில் தூக்கி வீசப்பட்ட அந்த கார் சாலையில் உருண்டு சென்றது.

இதனால், காரின் அனைத்து கண்ணாடிகளும் நொருங்கி விழுந்தன. அத்துடன், வீல்கள் மற்றும் காரின் முகப்பு பகுதி உள்ளிட்டவை கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த மோசமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த ஓட்டுநருக்கு எதுவும் ஆகவில்லை. சொல்லப்போனால், விபத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாததைப் போல காரை விட்டு வெளியே வந்து நின்றிருக்கின்றார்.
கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள கொன்னியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நல்லவேளையாக இந்த விபத்து சம்பவத்தால் வேறு யாரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளையில், அப்பாவியாக சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரு கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது.
இத்தனைக்கும் சாலை சற்று வெறிச்சோடிக் காணப்பட்டு இருக்கின்றது. பெரிய அளவில் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க இன்னோவா கார் ஓட்டுநரின் அலட்சியமே காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அகலமில்லாத சாலையும் அவ்விபத்திற்கு மற்றுமொரு காரணமாக இருக்கின்றது.
மேலும், விபத்து நடைபெற்ற போது ரெனால்ட் டஸ்டர் காரும் அதே இடத்தை கிராஸ் செய்தது. அப்போது சாதூர்யமாக டஸ்டர் டிரைவர் செயல்பட்டதால் இந்த கார்களுடன் விபத்தில் சிக்காமல் அது தப்பியது. இந்த விபத்திற்கு பின்னால் ஸ்விஃப்ட் காரின் முறையற்ற பார்க்கிங்கும் ஓர் காரணமாக உள்ளது.
அந்த கார் அப்பாவியாக நின்றிருக்கலாம், ஆனால், அது வெள்ளைக் கோட்டைத் தாண்டி வாகனங்கள் செல்லும் லேனுக்குள் இருக்குமாறு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே எதிரில் லோடு ஆட்டோ ஒன்று வர அது செல்லும் ஏதுவாக இன்னோவா காரை அதன் டிரைவர் பாதைவிட்டு இயக்க முயற்சித்திருக்கின்றார்.
ஆனால், கொஞ்சம் ஓவராக திருப்பவே அது மோதலைச் சந்தித்தது. அந்த நேரத்தில் அவர் வேகத்தைக் குறைத்து வாகனத்தை இயக்கி இருந்தால் இந்த விபத்து கட்டாயம் தவிர்க்கப்பட்டு இருக்கும். சாலையில் செல்லும்போது, குறிப்பாக குறுகிய பாதையில் பயணிக்கும் அதிக கவனம் தேவை என்பதையே இந்த விபத்து சம்பவம் நமக்கு பாடம் கற்பித்திருக்கின்றது. மேலும், வேகம் குறைவாக இருத்தல் வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு தெரியப்படுத்துகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீடித்து உழைக்கும் திறனுக்கு பெயர்போனதாகக் கருதப்படும் டொயோட்டா இன்னோவா கார், தற்போது பாதுகாப்பிற்கும் பெயர்போனதாக மாறி இருப்பதும் இந்த சம்பவத்தின் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது. எனவே குடும்பத்துடன் பாதுகாப்பான பயணிக்கு ஏதுவான கார்களில் ஒன்றாக இன்னோவா பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








