சீன காருனு கிண்டல் பண்ணவங்க எல்லாம் வாயை மூடிட்டு ஓரமா போயிட்டாங்க! இன்னோவா பின் பக்கத்தையே பதம் பாத்திருச்சு!

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) இருக்கின்றது. இந்த கார் தற்போது இந்திய சந்தையில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய வெர்ஷன்களிலேயே அது கிடைக்கின்றது. இந்த மாடல்களின் விலை சற்று அதிகம்.

இருப்பினும், சொகுசான ரைடை குடும்பத்துடன் அனுபவிக்க முடியும் என்கிற ஒற்றைக் காரணத்திற்காக இந்தியர்கள் பலர் இந்த காரை விரும்ப வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதோடு டொயோட்டாவின் இந்த தயாரிப்பும் அதிகம் தரமானதாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி கார்களின் பட்டியலில் இப்போதும் டொயோட்டா இன்னோவா முன்னணி இடத்தில் இருக்கின்றது.

Car crash pic

இந்த மாதிரியான சூழலில் இந்த முன்னணி கார் மாடலை சீன நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று சிறிய விபத்தில் மிகப் பெரிய அளவில் பதம் பார்த்து இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, அந்த சீன பிராண்டின் கார் மோதியதில் டொயோட்டா இன்னோவா கடுமையான சேதத்திற்கு ஆளாகி இருக்கின்றது.

அதேநேரத்தில், சீன நிறுவனத்தின் காரோ மிகவும் லேசான பாதிப்புகளை மட்டுமே சந்தித்து இருக்கின்றது. எம்ஜி கோமட் இவி எனும் குட்டி எலெக்ட்ரிக் காருடனான மோதலிலேயே இன்னோவா ஹைகிராஸ் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது. இந்த தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Mg comet ev

பலர் இந்த காரை சீன நிறுவனத்தின் சொப்பு கார் மற்றும் டப்பா கார் என கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப பார்க்கவும் இந்த கார் மிகவும் குட்டியாக சோப்பு டப்பா போன்று இருக்கும். ஆனால், தான் உருவத்தில் மட்டுமே சிறியவன் தரத்திலும், உறுதியிலும் மிக சிறந்தவன் என்பதை கோமெட் இவி உறுதி செய்திருக்கின்றது.

இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். இந்த காரே இந்தியாவின் மிக விலை குறைவான எலெக்ட்ரிக் காராகும். இதன் விலை ரூ. 8 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இந்த காரைவிட பல மடங்கு அதிக விலையைக் கொண்டாதகக் காட்சியளிக்கின்றது.

Toyota innova

விலையில் மட்டுமில்லைங்க உருவத்திலும் இந்த கார் கோமெட்டை விட மிகவும் பிரமாண்டமானதாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும் ஓர் குட்டி மோதலுக்கே இந்த காரின் பின் பக்கம் முழுமையாக நொறுங்கி இருக்கின்றது. கோமெட் இவியும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது. ஆனால், இன்னோவா உடன் ஒப்பிடுகையில் அதன் பதிப்பு சற்று குறைவுதான்.

இன்னோவாவின் இந்த நிலைமைக்கு காரணம் அதன் மோதல் அழுத்தங்களை தாங்கிக் கொள்ளும் வசதிதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் விபத்து நடைபெறும், அதனால் ஏற்படும் தாக்கங்களை தனக்குள்ளேயே தாங்கிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவே அதிக பாதிப்பிற்கு காரணமாக உள்ளது.

அதேவேளையில், இந்த அளவு பாதிப்பைச் சந்தித்தப் போதிலும் காருக்குள் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அனைத்து தாக்கங்களையும் பாடி பேனலும், சேஸிஸும் தாங்கிக் கொண்டு, பயணிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரத்தில், எம்ஜி கோமெட்டும் நல்ல பாதுகாப்பு திறன் கொண்ட குட்டி எலெக்ட்ரிக் காராக காட்சியளிக்கின்றது.

கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை 17 ஹாட் ஸ்டாம்பிங் பேனல்களைக் கொண்டு தயார் செய்திருக்கின்றது. இதுதவிர, இதன் பேட்டரியின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 39 விதமான தர நிலைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றது. இவையே இந்த காரை பாதுகாப்பான வாகனமாக மாற்றி இருக்கின்றது.

இதுதவிர, டூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, மும்முனை பெல்ட், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 17.3 kWh பேட்டரி பேக்கை எம்ஜி நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான கார்களின் லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதிக அளவில் பாதுகாப்பான கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற நெக்ஸான் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Article Published On: Monday, October 16, 2023, 18:20 [IST]
English summary
Toyota innova mg comet ev crash video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X