எடைக்கு போட இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. இந்த நேரத்துல காரை புதுசு போல அழகு படுத்திய இளைஞர்..

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) இருக்கின்றது. இது ஓர் எம்பிவி (MPV) ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக, அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால்தான் நீண்ட காலமாக இந்தியாவில் இன்னோவா பெயர் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் இன்னோவா இரண்டு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) இவையே அவை ஆகும்.

Old to new look

இவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் இன்னோவா க்ரிஸ்டா என்கிற பெயரில் ஒற்றை மாடலாகவும், அதற்கு முன்னதாக இன்னோவா என்கிற பெயரிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைத்தது. இந்த நிலையிலேயே இன்னோவா என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வந்த பழைய இன்னோவா புத்தம் புதியதுபோல் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் டைப் 2 வகை இன்னோவா தற்போது டைப் 4-ஆக மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், மிகவும் பழைய தோற்றத்தில் இருந்த இன்னோவா, தற்போது புத்தம் புதிய நிலைக்கு சென்றிருக்கின்றது. இந்த கார் அளவிற்கு புதிதாக உயர்ந்துள்ளது என்பதை வெளிக்காட்டக் கூடிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

Toyota innova

இந்த வீடியோ வெளியாகிய நிலையில் பலரின் மனதில் மிகப் பெரிய சந்தேகம் எழும்பி இருக்கின்றது. அதாவது, இந்தியாவில் காற்று மாசு காரணமாக பழைய வாகனங்கள் பயன்பாட்டில் அகற்றப்பட்டு வருகின்றது, குறிப்பாக, பத்து முதல் 15 ஆண்டுகள் வரையிலான பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய வேண்டும் என அரசு அறிவித்து வருகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே பழைய இன்னோவா பெரும் பொருட் செலவில் புதிதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் பழைய வாகனத்தை ஸ்கிாரப் செய்யும் திட்டம் பின் வாங்கப்பட்டதோ என்கிற சந்தேகமே எழும்பி இருக்கின்றது. ஆனால், அதுதான் இல்லை. பசுமை வரி மற்றும் இதர வரிகள் வசூலிக்கப்பட்டு பழைய வாகனங்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன.

Toyota innova rear

அந்தவகையிலேயே, இந்த இன்னோவாவும் மாற்றப்பட்டு இருக்கின்றது. பொதுவாகவே, டொயோட்டாவின் தயாரிப்புகள் நீடித்து உழைக்கும் தன்மைக்கு பெயர்போனவையாக இருக்கின்றன. அந்தவகையில், இன்னோவாவும் நீண்ட காலம் நடித்து உழைக்கும் திறன் கொண்ட கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், அவருடைய டைப் 2 இன்னோவாவிற்கு புத்துயிர் வழங்கி இருக்கின்றார்.

இன்னோவாவின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உள் பக்கமும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இருக்கைகள் தொடங்கி பக்கவாட்டு பேனல்கள் வரை என அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இதேபோல், கூடுதல் அம்சங்களாக அர்பர்ட் கிரில், பக்கவாட்டு படிகள், ஆகியவையும் புதிதாக இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Toyota innova seat

இதை அடுத்து எல்இடி ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவையும் இந்த காரில் புதிததாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய அம்சங்களால் டொயோட்டா இன்னோவா கூடுதல் பிரீமியம் வசதிக் கொண்டதாக மாறி இருக்கின்றது. இந்த மாற்றத்தைச் சட்டத்திற்கு புறம்பானது என கூறிவிட முடியாது.

அதேவேளையில், மாற்றம் குறித்த தகவல்களை பதிவு சான்றில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மட்டுமே போலீஸின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும். இல்லை எனில் கடுமையான அபராதம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும். இந்த மாற்றத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு உழைக்கும் நிலைக்கு இன்னோவா தற்போது மாறி இருக்கின்றது.

Toyota innova dashboard

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னோவா கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெரிய குடும்பங்களைக் கொண்டவர்கள் மத்தியிலும், நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் மத்தியிலும் இந்த கார் மாடலுக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 18:48 [IST]
English summary
Toyota innova type 2 modified into type 4 here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X