மாடிப் படியில் ஏறும் மாயஜால வீல் சேரை தயாரிக்கும் டொயோட்டா!

Written By:

கடந்த 2001ம் ஆண்டில் மாடிப் படியில் ஏறும் விசேஷ தொழில்நுட்பம் கொண்ட நகரும் சக்கர நாற்காலி ஒன்றை டீன் கேமென் என்பவர் வடிவமைத்து வெளியிட்டார்.

இந்த வீல் சேர் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படாமல் முடங்கி இருந்தது. இந்த நிலையில், இந்த வீல் சேரை தயாரிக்கும் திட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது டொயோட்டா. இந்த அட்டகாசமான வீல் சேர் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஐ-பாட்

ஐ-பாட்

செக்வே நிறுவனத்தின் டீன் கேமென் என்பவர்தான் இந்த நகரும் சக்கர நாற்காலியை கண்டுபிடித்தார். தற்போது இவர் டேகா என்ற நிறுவனத்தின் கீழ் இந்த தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல், மிகுந்த நிலைத்தன்மையுடன் மாடிப் படிகளில் இந்த நாற்காலி ஏறும் திறன் கொண்டது. இது வயோதிகர்கள், நோயாளிகள் யாருடைய தயவும் இல்லாமல் தங்கு தடையின்றி செல்ல பேரூதவி புரியும்.

 கூட்டணி

கூட்டணி

கிடப்பில் கிடந்த இந்த சக்கர நாற்காலி தயாரிப்பு திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது டொயோட்டா. இந்த நாற்காலியை கண்டுபிடித்த கேமெனின் டேகா என்ற நிறுவனத்துடன் டொயோட்டா ஒப்பந்தம் செய்துள்ளது.

 புதிய மாடல்

புதிய மாடல்

டொயோட்டா- கேமென் கூட்டணி ஐ-பாட் 2.0 என்ற புதிய புரோட்டோடைப் மாடல் உருவாக்கப்பட உள்ளது. இந்த மாடலைவி குறைவான விலை கொண்டதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 சமநிலைப்படுத்தி நுட்பம்

சமநிலைப்படுத்தி நுட்பம்

இந்த நகரும் சக்கர நாற்காலி மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் கேமென் நிறுவனத்தின் சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்தை தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்திக் கொள்ளளவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

விசேஷ சக்கர அமைப்பு

விசேஷ சக்கர அமைப்பு

மாடிப் படியில் ஏறும்போது கவிழ்ந்து விடாமல் செல்வதற்கு ஏதுவாக 4 பெரிய சக்கரங்களும், சாதாரண தளத்தில் செல்வதற்காக 2 சிறிய சக்கரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சரிவான சாலைகளில் கூட எளிதாக ஏறும்.

மாஜிக் சேர்

மாஜிக் சேர்

இந்த சக்கர நாற்காலியை மாயஜாலம் நிறைந்ததாக குறிப்பிடலாம். ஆம், இந்த வீல் சேர் இரண்டு சக்கரங்களில் கூட அசால்ட்டாக செல்கிறது. அடுத்த ஸ்லைடில் உள்ள வீடியோவை பார்த்தால் அந்த மாஜிக்கை நீங்களும் உணரலாம்.

ஐ-பாட் சக்கர நாற்காலியின் மாஜிக்கை வீடியோவில் காணலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Toyota is remaking the iBot magic wheel chair.
Story first published: Tuesday, May 31, 2016, 10:40 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos