டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் மாரடைப்பால் மரணம்!

டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் நேற்று இரவு தனது 64வது வயதில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து தனது கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் கிர்லோஸ்கர் குழுமத்தின் 4வது தலைமுறை தலைவராக இருந்தவர் விக்ரம் கிர்லோஸ்கர், 1888ம் ஆண்டு துவங்கப்பட்ட கிர்லோஸ்கர் குழுமம், பம்பு, இன்ஜின், கம்பிரஷர் உள்ளிட்ட சில பொருட்களைத் தயாரித்து வந்துள்ளனர். இந்த கிரிஸ்லோஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் விக்ரம் கிர்லோஸ்கர், இவர் தனது கல்லூரி படிப்பை முடித்ததும் இந்த பிஸ்னஸில் இறங்கிவிட்டார்.

டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் மாரடைப்பால் மரணம்!

இவர் ஆரம்பத்தில் புரோடெக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவர் பல மிஷின் டூல்ஸ்களை வடிவமைத்து,உருவாக்கினார்.1980களில் இவர் அரசின் மிஷில் டூல்ஸ் துறையில் இருந்தார். அப்பொழுது இவர் சர்வதேச அளவில் கேபில் எக்யூப்மெண்டிற்கான இறக்குமதி லைசென்ஸ் வெளியிட பெரும் முயற்சி செய்தார். இவர் பெங்களூருவில் சென்ட்ரல் மேனுஃபேக்சரிங் இன்ஸ்ட்யூட் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்தியாவின் சிஐஐயின் தேசிய கவுன்சிலாகவும், டெக்னாலஜி கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டியின் தலைவராகவும் இருந்தார். மிக முக்கியமாக டொயோட்டா குழுமத்தின் இந்திய பிஸ்னஸின் தலைவராகவும் இருந்தார். தனது கிர்லோஸ்கர் சிஸ்டம் என்ற நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவில் பார்ட்னர் ஆகியுள்ளார்.

இதன்மூலம் இவர் கிர்லோஸ்கர் டொயோட்டா டெக்ஸ்டைல் மிஷினரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ஸ்பின்னிங் மிஷின், அலுமினியம் டை- கேஸ்டிங், மற்றும் ஆட்டோ காம்போனென்ட்கள் தயாரிக்கின்றனர். அடுத்தாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் டொயோட்டா கார்களையும், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் மூலம் ஆக்ஸில், டிரைவ் ஷாப்ட்ஸ், கியர் மற்றும் இன்ஜின் தயாரிப்புகளும், டிஜி கிர்லோஸ்கர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பும், டென்ஸோ கிர்லோஸ்கர் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் ஹீட் எக்ஸசேஞ்சர், மற்றும் ஏசி தயாரிப்புகளும், டொயோட்டா டிஸ்ஷ்ஷூ இன்சூரன்ஸ் புரோக்கர் ஆகிய நிறுவனங்களை இவர் நடத்தி வந்தார்.

இவரது மரண அறிவிப்பை டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இவருக்குக் கீதாஞ்சலி என்ற மனைவியும், மானசி என்ற மகளும், பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். டொயோட்டா இந்தியா நிறுவனத்தைப் பொருத்தவரை இந்தியாவில் உள்ள பிஸ்னஸில் டொயோட்டா 89 சதவீதமும் கிர்லோஸ்கர் குழுமம் 11 சதவீத பங்கையும் வைத்திருக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடப்பட வேண்டியது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota kirloskar motors Vice Chairperson vikram kirloskar passes away
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X