ஊரில் இருக்கும் எல்லா காரையும் அறிமுகம் செய்த பிரதமர் பயன்படுத்தும் காரை தெரியுமா? அடிக்கடி பார்க்க முடியும்!!
ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சி வெகு விமர்சையாக டெல்லியில் உள்ள துவார்காவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சி என்பதால், ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இதன் மீதுதான் உள்ளது. இதற்கு மேலும் விளம்பரம் சேர்ப்பது போல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் கலந்துக் கொண்டார். இந்த கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பரவலாக பயன்படுத்தும் டொயோட்டா (Toyota) காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஆனது ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி 2 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்த 2025இல் அறிவித்ததுபோல் இன்று (ஜனவரி 17) துவங்கியது. ஆட்டோ எக்ஸ்போ ஆனது இந்த முறை மத்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

இதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக கண்காட்சியில் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வர பிரதமர் எந்த காரை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. ஆனால், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) கார் ஒன்று பிரதமரின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்றான இதனை அப்படியே பிரதமர் பயன்படுத்த வாய்ப்பில்லை.
பிரதமரின் பாதுகாப்பு காரணங்களுக்காக புல்லட் ப்ரூஃப் (Bullet Proof) தரத்துடன் தான் உருவாக்கப்பட்டு இருக்கும். பிரதமரின் பயன்பாட்டிற்காக இருப்பது கருப்பு நிறத்திலான லேண்ட் க்ரூஸர் கார் ஆகும். பிரதமரின் இந்த டொயோட்டா காருக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கும்.

இந்தியாவில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஆனது இசட்.எக்ஸ் (ZX) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் மட்டுமே லேண்ட் க்ரூஸர் கார் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் இந்த விலையுயர்ந்த டொயோட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.10 கோடியாக உள்ளது.
இது பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் லேண்ட் க்ரூஸர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலைக்கு இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக தேவைப்படும். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்கு என புல்லட் ப்ரூஃப் தரத்துக்கு மாற்றுவதற்கு காரின் விலைக்கு இணையாக செலவாகி இருக்கும்.

இந்திய சந்தையில் ஆட்டிட்யூட் பிளாக், டார்க் ப்ளூ மிகா, டார்க் ரெட் மிகா மெட்டாலிக், பிரேசியஸ் வொயிட் பேர்ல், சூப்பர் வொயிட் என்கிற 5 விதமான கலர் ஆப்ஷன்களில் லேண்ட் க்ரூஸர் விற்பனை செய்யப்படுகிறது. லேண்ட் க்ரூஸரில் 3.3 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 304 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டிற்கு என பல விலையுயர்ந்த கார்கள் புல்லட் ப்ரூஃப் உடன் இருக்கலாம். ஆனால், அவர் அதிகமாக காட்சித்தந்தது, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் ஆகும். இதில் இருந்து இந்த டொயோட்டா கார் எந்த அளவிற்கு உலகளவில் பிரபலமாக உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









