கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!
வீட்டிற்கே வந்து டொயோட்டா கார்களை சர்வீஸ் செய்யும் 'எக்ஸ்பிரஸ் சர்வீஸ்' என்ற புதிய சேவையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும்விதமாக 'சர்வீஸ் எக்ஸ்பிரஸ்' என்ற புதிய சேவை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவையை அளிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பது தவிர்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்துக்காக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 'மொபைல் சர்வீஸ்' வேன்களை தயாராக வைத்துள்ளன. அனைத்து விதமான டெயோட்டா கார்களையும் சர்வீஸ் செய்யக்கூடிய உபகரணங்கள் அந்த வேனில் நிறுவப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த வாகனத்தின்மூலம் பிரேக் டவுண் உள்பட சிறு சிறு கோளாறுகளை மட்டுமே சரிசெய்யப்படும். ஏனென்றால், கார்கள் மிகப்பெறிய அளவில் சேதம் அடைந்திருந்தால் அதனை நினைத்த இடத்தில் வைத்து சர்வீஸ் செய்ய முடியாது. அவற்றை, முறையான சர்வீஸ் மையங்களில் வைத்து மட்டுமே சரிசெய்ய முடியும். ஆகையால், இந்த வேன்மூலம் சிறு சிறு பிரச்னைகள் மட்டும் சீர்செய்யப்படும்.

குறிப்பாக, சர்வீஸ் எக்ஸ்பிரஸ் மூலம், வீல் பேலன்சிங், வீலை அலைன்மெண்ட் செய்வது மற்றும் ஈகோ கார் வாஷ் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இவ்வாறு வாடிக்கையாளர்களின் உடனடி தேவையை நிவரத்தி செய்யும் வகையில் இந்த வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெயிண்டிங் உட்பட வாகன அலங்கார பணிகளையும் இந்த வேன்மூலம் செய்ய இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் ராஜா கூறியதாவது, "நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களிலும் சேவையை வழங்கும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் நீண்டதூரம் பயணம் செய்து தங்களது வாகனங்களைச் சர்வீஸ் செய்யும் அலைக்கழிப்பு தவிர்கப்படும்.

வாடிக்கையாளர்களின் வாசலுக்கேச் சென்று சேவையை வழங்குவதன்மூலம், வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும். இத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையையும் உடனுக்குடன் பூர்த்திச் செய்யலாம். எங்களின் இந்த முயற்சியானது வாடிக்கையாளர்கள் பழுதடைந்த வாகனத்தை சர்வீஸ் சென்டர் நோக்கி பாதுக்காப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க முடியும். ரெகுலர் சர்வீஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எங்களின் இந்த முயற்சி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. என்றார்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இந்த சேவையானது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியானது வெற்றிப்பெறும் நிலையில், பிற பகுதிகளிலும் தொடங்கப்படும் என அந்த நிறவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த சேவையைப் பெற டொயோட்டா வாடிக்கையாளர்கள் கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் எண்ணுக்கோ அல்லது அவர்களின் இணையதளம் மூலமாக சர்வீஸ் தேதியைப் புக் செய்தால் போதுமானது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கே டொயோட்டா கிர்லோஸ்கரின் சர்வீஸ் மேன்கள் வந்து வாகனத்தின் பழுது உள்பட தேவையான சர்வீஸை கணக்கச்சிதமாக செய்து விடுவார்கள்.


Click it and Unblock the Notifications









