மரக்கட்டைகளால் ஆன செட்சுனா கான்செப்ட் காரை உருவாக்கியது டொயோட்டா
டொயோட்டா நிறுவனம், மரக்கட்டைகளால் ஆன செட்சுனா என்ற கான்செப்ட் காரை மிலான் டிசைன் வீக் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது.
பல்வேறு புதுமைகள் கொண்ட டொயோட்டா செட்சுனா கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டொயோட்டா செட்சுனா...
டொயோட்டா செட்சுனா கார் தான், இது வரை ஒரு பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யபடும் மிக பிரத்யேக கான்செப்ட் கார் ஆகும்.
இந்த ரோட்ஸ்டர் கார், முழுக்க முழுக்க கட்டையினால் உருவாக்கபட்டுள்ளது. அதுவும் ஜப்பானின் செடார் மற்றும் பிர்ச் ஆகிய மரங்களினால் ஆனது.

மிலன் டிசைன் வீக்;
மிலான் டிசைன் வீக் என்ற நிகழ்ச்சி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகிறது.
இது ஏப்ரல் 12-ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நிகழ்கிறது. மரச்சாமான்கள் தொடர்பான கண்காட்சியில், உலக அளவில் மிலன் டிசைன் வீக் என்ற கண்காட்சி மிகப்பெரியதாக திகழ்கிறது.

டொயோட்டாவின் பங்கேற்பு;
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் நிறுவனம், தற்போது தான் முதல் முறையாக இந்த மிலன் டிசைன் வீக் கண்காட்சியில் பங்கு பெறுகிறது.

வெளி தோற்றம்;
டொயோட்டா செட்சுனா கார், வெளிதோற்றத்தின் படி, கிளாஸிக் பிரிட்டிஷ் கார் மற்றும் ஸ்பீட் போட் ஆகிய இரண்டின் தோற்றம் ஒன்று சேர கொண்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

2-ஸீட்டர்;
டொயோட்டா செட்சுனா, 2 பேர் மட்டும் பயணிக்கும் வகையிலான 2-ஸீட்டர் கார் ஆகும்.

எலக்ட்ரிக் மோட்டார்;
டொயோட்டா செட்சுனா கார், எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு இயங்குகிறது.

ரேஞ்ஜ்;
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட தகவலின் படி, டொயோட்டா செட்சுனா காரில், லெட் ஆசிட் பேட்டரி மூலம் சக்தி பெரும் எலட்ரிக் மோட்டார், ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 26 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.

கட்டை வாகனம்;
டொயோட்டா செட்சுனா கான்செப்ட் கார், ஏறக்குறைய முழுவதும் கட்டையினால் உருவாக்கபட்டுள்ளது.
ஆங்காங்கே உள்ள லெதர் மற்றும் மிஷினின் அலுமினிய பாகங்கள், காண்ட்ராஸ்ட் தோற்றத்தை வழங்குகிறது.

எக்ஸ்டீரியர் பேனல்;
டொயோட்டா செட்சுனா காரின் வெளிப்புற பேனல்கள் ஜப்பானிய செடார் மரத்தினால் செய்யபட்டுள்ளது.

ஃபிரேம்;
டொயோட்டா செட்சுனா காரின் ஃபிரேம் ஜப்பானிய பிர்ச் மரத்தினால் செய்யபட்டுள்ளது.

ஃப்லோர் (தரை);
டொயோட்டா செட்சுனா காரின் தரை, ஜப்பானிய எல்ம் மரம் (ஃஜெல்கோவா செர்ரட்டா (Zelkova serrata)) கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல்;
டொயோட்டா செட்சுனா காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் இருக்கைகள் (சீட்), கடுகு எண்ணெய் மரத்தை (கேஸ்டர் ஆயில் பிளாண்ட்) கொண்டு செய்யபட்டுள்ளது.

ஸ்டியரிங் வீல்;
டொயோட்டா செட்சுனா காரின் ஸ்டியரிங் வீல், சிப்ரஸ் (Cypress wood) என்ற மரத்தின் கட்டை கொண்டு செய்யபடுகிறது.

ஒகுரியாரி;
டொயோட்டா நிறுவனம், இந்த செட்சுனா காரில் உள்ள வெவ்வேறு கட்டைகளினால் ஆன பாகங்களை ஒன்றாக இணைக்க ஒகுரியாரி என்ற பாரம்பரிய ஜப்பானிய செயல்முறையை பின் பற்றுகிறது.
இந்த ஒகுரியாரி செயல்முறையில், ஆணிகள் மற்றும் திருகுகள் (ஸ்க்ரூ) பயன்படுத்தப்படுவதே இல்லை என்பது சிறப்பான செய்தி ஆகும்.

செட்சுனாவின் சிறப்பு;
டொயோட்டா நிறுவனம் உருவாக்கியுள்ள செட்சுனா வெரும் கார் அல்ல. செட்சுனா கலை மற்றும் கலைத்திறனின் வேலைப்பாட்டிற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

தலைமுறைகளுக்கான கார்;
கலை மற்றும் கலைத்திறனின் வேலைப்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் டொயோட்டா செட்சுனா, அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு தொடர வேண்டிய கார் ஆகும்.
இது முந்தி கொண்டு செல்வதற்கான வாகனமாக இல்லாமல் இருக்கலாம். காலம் கடந்து செல்ல செல்ல, இந்த காரின் வயதும் கடந்து கொண்டே இருக்கும். இது உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்து தலைமுறைகளுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். இது குடும்பத்தினர் உணர உணர இதன் சிறப்புகளை பாராட்டி கொண்ட இருப்பர் என டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

மெருகு ஏறும் பண்புகள்;
வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளுக்கு வெளிபடுத்தபடுவதை பொருத்து, கட்டைகளின் பண்புகள் மாறிக்கொண்டே இருக்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

100-ஆண்டு கால மீட்டர்;
டொயோட்டா செட்சுனா கார், காலம் கடந்து செல்ல, இந்த காரை உபயோக்கித்தவர்களின் பண்புகளை ஏற்று கொண்டு அதற்கு ஏற்றவாறு மாறிக்கொள்கிறது.
அந்த வகையில், இந்த செட்சுனா காருக்குள்ளே ஒரு 100-ஆண்டு கால மீட்டர், ஒருங்கிணைக்கபட்டுள்ளது (எம்பெட்). பேரன் - பேத்திகள், கொள்ளு பேரன் - பேத்திகள் இந்த கார் எவ்வளவு வயதானது என தெரிந்து கொள்ள இந்த 100-ஆண்டு கால மீட்டர் காலம் உதவுகிறது.

முன்னோடியாக விளங்கும் டொயோட்டா;
கட்டையிலான இந்த டொயோட்டா செட்சுனா போன்ற இந்த கார் கான்செப்ட் வித்தியாசமான விஷயமாக இருக்கலாம். ஆனால், கிளாசிக் கார்கள் மற்றும் மறுவடிவமைக்கபட்ட கார்களுக்கு இருக்கும் தொடர்ந்து வளர்ந்து வரும் சந்தைகளை கருத்தில் கொள்ளும் போது, செட்சுனா காரின் உருவாக்கம் சிறந்த யோசனை ஆகும்.
டொயோட்டா நிறுவனம், இந்த கிளாசிக் கார்களின் சந்தையில் முன்னோடியாக விளங்குகிறது என்று கூறலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மனதை கொள்ளை கொள்ளும் தேக்கு மர கார்... பஞ்சாப் இளைஞர் அசத்தல்!!
பாசத்தையும் குழைத்து மர வெஸ்பாவை உருவாக்கிய கார்பென்டர்!!
நட்சத்திரங்களின் கார்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா செட்சுனா கார் - கூடுதல் படங்கள்
டொயோட்டா செட்சுனா கார் - கூடுதல் படங்கள்

டொயோட்டா செட்சுனா கார் - கூடுதல் படங்கள்
டொயோட்டா செட்சுனா கார் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








