10 நிமிடம் சார்ஜ் போட்டா போதும் சென்னை- கோவா சிட்டா பறக்கலாம்! எப்படித் தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் இவிகளில் 1200 கிலோமீட்டர் பயணிக்கக் கூடிய திறன் கொண்ட சாலிட் ஸ்டேட் பேட்டரியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவிகளில் அதிக ரேஞ்ச் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில், இந்த பிரச்சனைக்கு இந்த பேட்டரி தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. மக்கள் பலர் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

toyota solid-state battery

எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசுவை வெகுவாக குறைக்கிறது. அதேநேரம் பயணத்திற்கான செலவையும் குறைக்கிறது. இந்த இரு காரணங்களுக்காக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் கார்களில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ரேஞ்ச் தான்.

பெட்ரோல், டீசல் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி விட்டுக் குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீண்டும் பெட்ரோலின் நிரப்பித் தொடர்ந்து பயணிக்கலாம். பெட்ரோலை நிரப்புவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது இதனால் நீண்ட தூரப் பயணத்திற்கு பெட்ரோல், டீசல் கார் ஏற்றதாக இருக்கிறது.

toyota solid-state battery

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை பேட்டரி சார்ஜில் இயங்கும் திறன் கொண்டது. இதனால் அவ்வ்போது சார்ஜ் ஏற்ற வேண்டும். ஒரு பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற அதிகமாக நேரம் பிடிக்கிறது. அதேநேரம் முழுமையாக ஒரு பேட்டரி சார்ஜ் ஆகிவிட்டால் அதிகபட்சம் 300- 400 கிலோமீட்டர் வரை தான் ஒரு எலெக்ட்ரிக் காரில் பயணிக்க முடியும். பெட்ரோல் காரை ஒப்பிடும்போது இது அதிக நேரத்தைப் பயணத்திற்காக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் பலர் எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் டொயோட்டா நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது உள்ள எலெக்ட்ரிக் கார்களில் லித்தியம் அயான் ரக பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது.

toyota solid-state battery

டொயோட்டா நிறுவனம் சாலிட் ஸ்டேட் பேட்டரி என்ற புதிய ரக பேட்டரியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த சாலிட் ஸ்டேட் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரி என்பது பத்து நிமிடத்தில் சார்ஜ் ஏறி விடும். இந்த இந்த பேட்டரியின் முழு சார்ஜில் கார்கள் 1200 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

தற்போது இந்த சாலிக் ஸ்டேட் ரக பேட்டரி முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான கண்டுபிடிப்பு முயற்சியிலேயே டொயோட்டா தற்போது நிறுவனம் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே லித்தியம் அயான் பேட்டரியின் அடுத்த தலைமுறை பேட்டரியில் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த லித்தியம் அயான் பேட்டரியின் புதிய தலைமுறையில் ரேஞ்ச் மிக அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 1000 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரிகளாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நீண்ட தூரம் பயணிக்கும் காரை அறிமுகப்படுத்தியது.

விஷன் இ க்யூ எக்ஸ் எக்ஸ் கான்செப்ட் கார் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் முழு சார்ஜில் ஆயிரம் கிலோ மீட்டர் வரை சாதாரணமாகப் பயணித்தது. இதுதான் இதுவரை எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் பயணித்த நீண்ட தூரமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் நீண்ட தூரம் பயணிக்கும் லித்தியம் அயான் புதிய தலைமுறை பேட்டரியும் அந்நிறுவனமே தயாரிக்கும் சாலிட் ஸ்டேட் பேட்டரியும் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி மார்கெட்டிற்கு வந்தால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு ஆப்பு தான்!

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 15:31 [IST]
English summary
Toyota plans to unveil solid state battery new battery technology soon
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X