ஷோரூமில் புதுசா வாங்கியது போல இருக்கு... டொயோட்டா குவாலிஸில் அப்படி என்ன தாங்க இருக்கு? இன்னமும் பயன்பாட்டில்!

பழைய டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) கார் ஒன்று புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த குறிப்பிட்ட குவாலிஸ் காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி தொடர்ந்து முழுமையாக பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய கார்களுள் ஒன்று குவாலிஸ் ஆகும். 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட குவாலிஸ் 2004 வரையில் 4 வருடங்களுக்கு இந்தியாவில் விற்பனையில் இருந்தது. வெறும் 4 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்தாலும், அதற்கு உள்ளாகவே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை இந்த டொயோட்டா தயாரிப்பு பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கேரளாவில் இன்னமும் பழைய தோற்றத்தில் டொயோட்டா குவாலிஸ் கார்!!

இதனாலேயே இப்போதும் சிலர் டொயோட்டா குவாலிஸ் காரை பயன்படுத்தி வருவதை பார்க்க முடியும். அவ்வாறு கேரளாவில் குவாலிஸ் காரை வைத்திருக்கும் நபர் ஒருவர் அதனை முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். இதனால் முதன்முதலாக ஷோரூமில் இருந்து வாங்கப்பட்ட போது எவ்வாறு காட்சியளித்ததோ அதற்கு இணையாக இந்த குறிப்பிட்ட குவாலிஸ் கார் காட்சியளிக்கிறது. இந்த கார் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், முற்றிலுமாக புத்துயிர் அளிக்கப்பட்ட குவாலிஸ் எம்பிவி காரை காணலாம். இந்த காரின் உட்பக்க கேபின் கூட கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பெயிண்ட் பழையது போன்றுதான் காட்சியளிக்கிறது. ஆனால் இந்த காருக்கு பெயிண்ட் கூட ஒரிஜினல் பச்சை மற்றும் சில்வர் என்ற ட்யூவல்-டோனில் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளதாக வீடியோவில் இந்த குவாலிஸ் காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ட்யூவல்-டோன் பெயிண்ட் தான் குவாலிஸின் அடையாளம் ஆகும்.

இந்த பெயிண்ட் வேலைகள் கொச்சியில் உள்ள ஒரு கேரேஜில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பெயிண்ட்டிற்கு முன்பு காரில் ஏதேனும் கீறல்கள் அல்லது சேதங்கள் இருந்ததா என்பதை தெரிவிக்க உரிமையாளர் மறுத்துவிட்டார். ஹெட்லேம்ப்கள் இந்த குறிப்பிட்ட குவாலிஸ் காரில் மாற்றப்பட்டுள்ளன. குவாலிஸில் டொயோட்டா நிறுவனம் மஞ்சள் நிற ஒளியை வழங்கக்கூடிய ஹெட்லேம்ப்களை வழங்கி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் புதியதாக பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லேம்ப்கள் ஹலோஜன் தரத்திலானவை. டர்ன் இண்டிகேட்டர்களின் லென்ஸ் நல்லதாக இருந்தால், டர்ன் இண்டிகேட்டர்களில் கை வைக்கப்படவில்லை. இருப்பினும் ஹெட்லேம்ப்களுக்கு மேலே எல்இடி டிஆர்எல்-களை புதியதாக உரிமையாளர் பொருத்தியுள்ளார். இந்த குவாலிஸ் காரில் முரட்டுத்தனமான தோற்றத்திலான பம்பர் புல்பார் உடன் முன்பக்கத்தில் இருப்பதை காணலாம். இவ்வாறான பம்பர் உடன் தற்சமயம் எந்த காரும் விற்பனை செய்யப்படுவதில்லை.

கேரளாவில் இன்னமும் பழைய தோற்றத்தில் டொயோட்டா குவாலிஸ் கார்!!

இன்னும் சொல்லப்போனால், இத்தகைய புல் பாரை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானதாகி விட்டது. ஆனால் இந்த குவாலிஸ் காரில் புல் பாரை டொயோட்டா நிறுவனமே தொழிற்சாலையில் தயாரித்து வழங்கியுள்ளதால் பிரச்சனை இல்லை. இந்த குவாலிஸ் காரின் புல் பார் ஆனது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதாக உள்ளது. இந்த பிளாஸ்டிக் புல் பாரை ஏதேனும் ஒரு டொயோட்டா டீலர்ஷிப்பின் வாயிலாக வாங்கி காரில் இந்த குவாலிஸ் கார் உரிமையாளர் பொருத்தியிருப்பார்.

புல் பாருக்கு கீழே பெரிய அளவில் ஃபாக் விளக்கு பொருத்தப்பட்டுள்ளன. பொனெட்டில் கூடுதலாக மற்றொரு டொயோட்டா லோகோ பொருத்தப்பட்டுள்ளதை காணலாம். இதனை சவுதி அரேபியாவில் இருந்து வாங்கியுள்ளதாக கார் உரிமையாளர் வீடியோவில் தெரிவித்துள்ளார். சக்கரங்களை பொறுத்தவரையில், வழக்கமான 14 இன்ச் இரும்பு சக்கரங்களுக்கு பதிலாக அளவில் சற்று பெரிய 15-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர்த்து காரின் வெளிப்பக்கத்தில் பல்வேறு பகுதிகளில் புதியதாக க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 10:42 [IST]
English summary
Toyota qualis mpv car beautifully restored in kerala
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+