மாட்டு வண்டியில் வந்து ரூ 1.5 கோடிகாரை டெலிவரி எடுத்தது இவரா? ஆச்சரியமா இருக்குதே!
இன்று கார் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் காரை டெலிவரி எடுக்கும் நிகழ்வை வித்தியாசமாக செய்ய பலர் பல வழிகளில் யோசிப்பார்கள். அதன்படி சிலர் ஆட்டோ, பைக், கார், ஏன் டிராக்டரில் வந்து கூட காரை டெலிவரி எடுத்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி மாட்டு வண்டியில் வந்து காரை டெலிவரி எடுத்த வீடியோ பலரை ஆச்சிரயப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்எஸ்ஆர் சஞ்சு இவர் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறார். இவர் சமீபத்தில் டொயோட்டா நிறுவனத்தின் வில்ஃபயர் காரை வாங்கிானர். இதற்காக இவர் மாட்டு வண்டியில் வந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரூ1.5 கோடி மதிப்பிலான காரை வாங்க இவர் மாட்டு வண்டியில் வந்ததை பலர் ஆச்சரியமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை அவரே அவரது சேனலில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பெங்களூருவை சேர்ந்த பணக்கார விவசாயியான சஞ்சு தனது பணியாளரிடம் கார் வாங்க கிளம்பலாமா என கேட்டு துவங்குகிறார். இவரது அலுவலக வாசலில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிறது.
இதில் பளிச் மஞ்சள் நிற போர்ஷே பானமேரா சொகுசு செடான், ஃபோர்டு மஸ்டாங்க், மசரெட்டி லெவான்டே, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் இருந்தன. இவர் அலுவலகத்திலிரந்து வெளியே வந்து பார்த்த போது இதில் ஒரு கார் கூட இல்லை எல்லாம் வெளியே சென்றுவிட்டது. உடனடியாக இவர் தனது ஊழியர்களிடம் வேறு வாகனத்தை எடுத்து வர சொல்லுகிறார்.
அங்கு வேறு கார் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு அங்கு மாட்டு வண்டி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவரும் பாரம்பரியமான ஆலையில் கழுத்தில் பெரிய தங்க சங்கிலியுடன் இந்த மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்ய துவங்கினார். இவர் சாலையில் செல்லும்போது பலரது கவனத்தை ஈர்த்தார்.இவர் நேரடியாக ஷோரூம் சென்று தனது காரை டெலிவரி எடுத்தார்.
அங்கு இவருக்கு பேப்பரில் கையெழுத்துவாங்கப்பட்டது. கார் சிறப்பு நிற துணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதை விலக்கி இவரது வெள்ளை நிற வில்ஃபயர் காரை பார்த்தார். இதில் ஏற்கனவே மாலை எல்லாம் மாட்டியிருந்தது. பின்பு இவரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் கடவுளை வணங்கி சாவியை பெற்று காருக்குள் ஏறினார்.

டொயோட்டா வில்ஃபயர் காரை பொருத்தவரை ஒரு சொகுசு எம்பிவி காராக இருகு்கிறது. இந்த கார் ரூ1.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இந்த காரில் 2 கேப்டன் சீட்டுகள், ரூஃப் பகுதியில் பொருத்தப்பட்ட என்டர்டெயின்மென்ட் அமசங்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ரீகிளைனிங் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இது போக இந்த காரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அடாஸ் அம்சம் 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் சீட்டுகள், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 193 பிஎஸ் பவரும் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் இருகு்கிறது. இந்த இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக வாகனம் வாங்கும்போது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் இப்படியாக செய்வார்கள். அப்படி தான் இவரும் செய்துள்ளார். இதுபலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதே போல மற்றும் சிலர் இது போன்ற முயற்சியை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









