வாடிக்கையாளர் தலையில் குண்டை தூக்கி போட்ட டொயோட்டா! இ20 பெட்ரோல் போட்டால் வாரண்டி கிடையாது

இந்தியா தற்போது பெட்ரோலில் இ20 என்ற 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்யும் இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதும் பேசு பெருளாகியுள்ளது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது கார்களில் இ20 பெட்ரோலை பயன்படுத்தி வாகனத்தின் உதிரி பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு வாரண்டி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா பெட்ரேலுக்காக மாற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது 10 சதவீத்திற்கும் அதிமாக எத்தனால் கலக்கப்படுகிறது. விரைவில் இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பை எட்டப்போகிறது.

Toyota Warranty E20

இந்நிலையில் இது பேசு பொருளாக இருக்கிறது. இந்த பெட்ரோல் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா எனபலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரும்பாலும் பழைய வாகனங்களுக்கு மட்டுமே எத்தனால் கலந்த பெட்ரோல் பிரச்சனையை ஏற்படுத்தலாம் புதிய ரக வாகனங்களில் எந்த பிரச்சனையும் இருக்காது என கூறப்படும் நிலையில் டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய பீதியை கிளப்பியுள்ளது.

டொயோட்டாநிறுவனம் பிரெஸ்ஸா காரின் ரீபேட்ஜ் வெர்ஷனாக அர்பன் க்ரூஸர் என்ற காரை விற்பனை செய்து வந்தது. இந்த காரில் மாருதி நிறுவனத்தின் கே15 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வாங்கி பயன்படுத்தும் உரிமையாளர் ஒருவர் டொயோட்டா நிறுவனத்திற்கு தனது சந்தேகம் ஒன்றை இமெயில் மூலம் கேட்டிருந்தார். இதற்கு கிடைத்த பதிலில் தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.

Toyota Warranty E20

அவர்இந்த இமெயிலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் இ20 ரக பெட்ரோலை பயன்படுத்துவது பாதுகாப்பா இல்லையா என கேள்வி எழுப்பிருந்தார். இதற்கு டொயோட்டா நிறுவனம் இது பரிந்துரைக்கப்படுவதில்லை. வாகன மேனுவலில் உள்ளது படி இ10 ரக பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது என விளக்கம் அளிந்திருந்தது.

இதன் பிறகு அவர் இ20 ரக பெட்ரோலை பயன்படுத்தினால் இது டொயோட்டாவின் வாரண்டியை பாதிக்குமா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு டொயோட்டா நிறுவனம் மேனுவலில் உள்ளதை தவிர வேறு எந்த வகையான எரிபொருளை பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் பாதிப்பை வாரண்டியில் கிளைம் செய்ய முடியாது என தெரவித்திரந்தது.

Toyota Warranty E20

இந்த பதில்கள் மூலம் டொயோட்டா நிறுவனம் இ10 என குறிப்பிட்டு விற்பனை செய்த வாகனங்களில் இ10 பெட்ரோலை பயன்படுத்துவது தான் சிறந்தது. இ20 ரக பெட்ரோலை பயன்படுத்தினால் வாகனத்தின் வாரண்டியை பயன்படுத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. இதை டொயோட்டா நிறுவனம் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்றாலும் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இ20 பெட்ரோல் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தகவலை பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இது குறித்து டொயோட்டா நிறுவனம் பொது வெளியில் விளக்கம் அளித்தால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 22:45 [IST]
English summary
Toyota warranty e20 warning hyryder innova hycross hybrids
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X