டாடா, டெஸ்லா எல்லாம் இனி டொயோட்டா கிட்ட பிச்ச எடுக்கனும்! 1200 கி.மீ ரேஞ்ச் தரும் பேட்டரி ரெடியாகுது!
டொயோட்டா நிறுவனம் சாலிட் ஸ்டேட் பேட்டரியை தயாரிக்கும் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது. இந்த பேட்டரியை 10 நிமிடம் சார்ஜ் போட்டால் போதும் 1200 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாட்டைச் சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சார்லிட் ஸ்டேட் பேட்டரி குறித்த ஆய்வுப் பணிகளை செய்து வருகிறது. இந்தப் பணியில் துரிதமாக செயல்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அந்நிறுவனம் ஹைபிரிட் கார்களை உருவாக்குவதில் தனது கவனத்தை செலுத்தியது.

தற்போது உலகம் முழுவதும் டொயோட்டா நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் தயாரிக்கப்பட்டு பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் மீண்டும் தனது சாலிட் ஸ்டேட் பேட்டரி குறித்த ஆய்வு பணிகளை டொயோட்டா நிறுவனம் தற்போது தீவிரப் படுத்தி உள்ளது.
இந்நிறுவனம் கடந்த வாரம் ஜப்பானில் இடமிச்சு என்ற ஜப்பான் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்துதான் சாலிட் ஸ்டேட் பேட்டரி என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கப் போகின்றனர். இந்த பேட்டரி வெற்றிகரமாக தயாரிப்புக்கு வந்துவிட்டால் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக்காரர்களான டெஸ்லா மற்றும் பிஒய்டி நிறுவன கார்களின் விற்பனைக்கு சவால் விடும் வகையில் டொயோட்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயார் செய்ய துவங்கிவிடும்.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் அயான் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் உருவாக்கப்படுகிறது. பொதுவாக ஒரு பேட்டரி என்றால் அதில் கேத்தோட், ஆனோட் மற்றும் எலக்ட்ரோலைட் ஆகிய மூன்று அம்சங்கள் இருக்கும்.
குறிப்பிட்ட இந்த லித்தியம் அயான் பேட்டரியை பொருத்தவரை எலக்ட்ரோலைட் என்பது திரவ வடிவில் வழங்கப்பட்டிருக்கும். இப்படியாக இருப்பதால் இது சேதமாக அதிகமாக வாய்ப்புகள் உள்ளன குறிப்பாக பேட்டரி வீங்குவது லீக் ஆவது மற்றும் எளிதாக தீப்பற்ற கூடிய வகையில் இருப்பது எல்லாம் இந்த லித்தியம் அயான் பேட்டரியில் இருக்கிறது.

இதன் விளைவாக பல இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அது சமாளிக்க தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் வகையில் ஸ்டாலின் ஸ்டேட் பேட்டரி என்ற புதிய தொழில்நுட்பத்தை டொயோட்டா நிறுவனம் கிட்டத்தட்ட தயாரித்து விட்டது என்று சொல்லிவிடலாம்.
இந்த தொழில்நுட்பத்தில் எலெக்ட்ரோலைட் என்ற விஷயம் திரவவடிவில் இல்லாமல் திடவடிவில் இருக்கும். இதனால் மேலே சொன்ன எந்த பிரச்சனையும் இந்த பேட்டரியில் இருக்காது. அதேநேரம் இந்த பேட்டரியின் திறனும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்த பேட்டரியில் இருக்கும் மின் சக்தியின் திறனும் அதே நேரம் இந்த பேட்டரியில் இருந்து வெளியேறும் மின்சக்தியின் திறனும் தற்போது உள்ள லித்தியம் அயான் பேட்டரியை விட மிக அதிக அளவில் இருக்கும்.

அதேநேரம் இந்த பேட்டரி ஒரு பாதுகாப்பான பேட்டரி ஆகவும் இருக்கும். மார்க்கெட்டில் இந்த பேட்டரி பயன்பாட்டுக்கு வந்தால் இந்த பேட்டரி முழு சார்ஜில் 1200 கி.மீ வரை ஒரு வாகனத்திற்கு தரும் திறன் கொண்ட பேட்டரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேட்டரியின் தொழில்நுட்பத்தை கிட்டத்தட்ட டொயோட்டோ நிறுவனம் கண்டுபிடித்து விட்டது. இதை 2026 27 ஆம் நிதியாண்டில் கமர்சியல் ரீதியாக தயாரிக்க துவங்கி தனது வாகனங்களில் பொருத்தி புதிய எலேக்ட்ரிக் வாகனங்களை டொயோட்டோ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த பேட்டரியின் தயாரிப்பு விலையையும் குறைக்க பல்வேறு யுத்திகளை இந்நிறுவனம் கையாண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் சாலிட் ஸ்டேட் பேட்டரி மற்றும் விற்பனைக்கு வந்து விட்டால் அது எலெக்ட்ரிக் கார் உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்யும். லித்தியம் அயான் பேட்டரிகளை தூக்கிவிட்டு மக்கள் சாலிட் ஸ்டேட் பேட்டரியை விரும்பி வாங்கி தங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்வார்கள். இதனால் வாகனத்தின் உழைப்பு அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









