ஃப்ரெண்டோட காரில் டூருக்கு போன குடும்பம்! விதிமீறல்னு கூறி அபராதத்தை போட்ட போலீஸ்! இப்படி ஒரு விதி இருக்கா!..

சுற்றுலா செல்வது யாருக்குதான் பிடிக்காது. வாரம் முழுக்க யாரோ ஒருவரின் வளர்ச்சிக்காக உழைக்கும் மக்களுக்கு அவர்களின் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. அதிலும் ஒரு சில நிறுவனங்கள் விடுமுறை நாட்களிலும் டார்கெட், பென்டிங் ஒர்க்கை முடிக்க வேண்டும் என கூறி அவர்களை டார்ச்சர் செய்வது உண்டு.

இவர்களிடம் இருந்து போராடி விடுமுறையைப் பெற்று குடும்பத்துடன் நேரத்தைக் கழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இந்த நாளை கூடுதல் சிறப்பாக்க ஒரு சிலர் குடும்பத்துடன் சுற்றுலாப் புறப்படுவதுண்டு. இவ்வாறு சுற்றுலா செல்லும்போது பொது வாகனங்களில் பயணிப்பதைக் காட்டிலும் தனிப்பட்ட வாகனத்தில் பயணிக்கும்போதே மிக சுந்திரமான மற்றும் சுவாரஷ்யமான பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Cops fined for using friend s car trip

இதனால்தான் வாடகை வண்டி அல்லது நண்பர்களிடம் இருந்து காரை கடனாக பெற்று ஒரு சிலர் சுற்றுலா செல்கின்றனர். இது ரெண்டுமே கிடைக்காத பட்சத்திலேயே பொது போக்குவரத்தை சுற்றுலா பயணிகள் நாடுகின்றனர். தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்த பல காரணங்கள் இருக்கின்றனர். சுற்றுலா போகும் இடத்தில் மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே முதன்மையான காரணம் ஆகும்.

ரயில்வே ஸ்டேஷன் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ரூம் அல்லது சுற்றுலா ஸ்பாட் போவதற்கே ஆட்டோக்காரர்கள் சிலர் 100 அல்லது 200 ரூபாயைக் கட்டணமாக கேட்பார்கள். இதுபோன்ற மோசடியைத் தவிர்க்கவே யாரிடமாவது கெஞ்சிக் கூத்தாடியாவது கடனுக்கு வாகனத்தை வாங்கி ஒரு சிலர் சுற்றுலா செல்கின்றனர்.

அந்தவகையில், நண்பரிடம் இருந்து காரை கடனாகப் பெற்று ரிஷிகேஷ் மற்றும் மணாலி ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற டெல்லியைச் சேர்ந்த குடும்பத்தினரிடமே போக்குவரத்து காவல்கள் விநோதமான வகையில் அபராத செல்லாணை வழங்கி இருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனம் நண்பர்களிடம் இருந்து வாங்கி வரப்பட்டது என்கிற காரணத்திற்காகவே காவல்துறையினர் அபராத செல்லாணை வழங்கி இருக்கின்றனர்.

நம்ப முடியவில்லையா, காவலர்கள் செல்லாணை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோகூட தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ஹிமாச்சல மாநில போலீஸாரே இந்த விநோத செயலுக்கு காரணமானவர்கள் ஆவார்கள். வாகனத்தில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த போதிலும், கடனாகப் பெற்று வந்த கார் என கூறி அவர்கள் அபராத செல்லாணை வழங்கி இருக்கின்றனர்.

கடுமையான வாக்குவாதத்தில் அந்த காரில் வந்த குடும்பத்தினர் ஈடுபட்டும் பலனளிக்காத நிலையே அங்கு தென்பட்டது. அவர்கள் இந்த கார் நெருங்கிய நண்பரிடம் இருந்து பெறப்பட்டு வந்தது என்று கூறியும் காவலர்கள் அந்த கருத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். தொடர்ந்து, தங்களால் இந்த காரை நீதிமன்றத்திற்குகூட இப்போது எடுத்துச் செல்ல முடியும் என்று காவலர்கள் கூறினர்.

இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நம்மில் பலர் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து காரை கடனாகப் பெற்று சுற்றுலா அல்லது சொந்த ஊரில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு போவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழிலேயே இந்த விநோத அபராத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உண்மையில் இதற்கு சட்டத்தில் இடம் உண்டா கேட்டால் இல்லை என்றே விதிகள் கூறுகின்றன. நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து தாராளமாக காரை கடனாகப் பெற்று சுற்றுலா செல்ல முடியும். அதேவேளையில், இந்த விதியைப் பயன்படுத்தி ஒரு சில கார் வாடகை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் தனி நபர் பயன்பாட்டு வாகனங்களை கள்ளத் தனமாக வாடகை விட்டு சம்பாதித்து வருகின்றனர்.

இத்தகைய வாகனங்களுக்கு போக்குவரத்து காவலர்களால் தாராளமாக அபராத செல்லாண் வழங்க முடியும். அதுதவிர, அவர்களால் வாகனத்தை பறிமுதல் செய்யவும் முடியும். ஆகையால், உண்மையில் இந்த சம்பவத்தில் நண்பரின் கார்தான் கடனாகப் பெற்று வரப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால் போடப்பட்ட அபராத செல்லாணை ரத்துச் செய்துக் கொள்ள முடியும்.

மேலும், போலீஸாரின் இந்த நடத்தைக் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த குடும்பத்தினர் அந்த காரின் உரிமையாளரை செல்போனில் அழைத்து பேச வைத்தும் இது சட்ட விரோதம் என கூறி காவலர்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதே கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

நம்ம சென்னையில்கூட போக்குவரத்து போலீஸ் ஓர் விநோத விதியைக் கையாண்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் பயன்படுத்தும் வாகன் ஒரு வேளை உங்களுடைய நண்பருடையதாக இருந்து, அதில் நீங்கள் பயணிக்கும்போது போலீஸ் உங்களை பிடித்து, அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு போன் போட்டு, உங்க நண்பர் வண்டிய கொண்டு வந்திருக்காரே அது உங்களுக்கு தெரியுமா என கேட்க, அது தனக்கு தெரியாது என அவர் சொல்லிவிட்டால், அவ்வளவுதான் சோலி முடிஞ்சு.

ஆமாங்க, நீங்க எடுத்து வரும் வண்டி உங்களுடைய நண்பருடையதாக இருப்பினும், அந்த வண்டியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அவருக்கு தெரியாமல் வாகனத்தை எடுத்து நீங்கள் சுத்திக் கொண்டிருந்தால் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அண்ணனுடைய வண்டியாக இருந்தாலும் உங்களை பிடிச்சு சென்னை போலீஸ் ஜெயில்ல போட்டுவிடுவாங்க. மூனு மாசம் வரை ஜெயில் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று பல்வேறு விநோத போக்குவரத்து விதிகள் உள்ளன. சில காவலர்கள் அதை கெடுபிடியாக கடைபிடிக்கும்போது இப்படி ஒரு விதி நம்ம ஊருல இருக்குது என்பதே தெரிய வருகின்றது. இதேபோல், தெரியாதவர்களுக்கு லிஃப்ட் கொடுக்கக் கூடாது. ஷூ இல்லாமல் டூ-வீலரை ஓட்டக் கூடாது என்கிற விதிகள் எல்லாம்கூட நாட்டில் இருக்கின்றன. இதற்காகவும் எதிர்காலத்தில் காவலர்கள் உங்களுக்கு அபராத செல்லாணை வழங்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 24, 2023, 8:30 [IST]
English summary
Traffic cops fined for using on a trip in a friend s car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+