தைவானில் நிலவும் "டிராபிக் அருவி"நெருக்கடி..! ஆனா இவங்ககிட்ட இருந்து நாம நிறைய கத்துக்கனும்..!
தைவான் நாட்டில் ஸ்கூட்டர்களால் ஏற்பட்டு வரும் "டிராபிக் அருவி" பற்றி உங்களுக்கு தெரியுமா? அவ்வளவு டிராபிக்கிலும் ஒருவர் கூட சாலை விதிகளை மீறாமல் பயணம் செய்கின்றனர் என்றால் ஆச்சரியம் தானே
தைவான் நாட்டில் ஸ்கூட்டர்களால் ஏற்பட்டு வரும் "டிராபிக் அருவி" பற்றி உங்களுக்கு தெரியுமா? அவ்வளவு டிராபிக்கிலும் ஒருவர் கூட சாலை விதிகளை மீறாமல் பயணம் செய்கின்றனர் என்றால் ஆச்சரியம் தானே

இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மக்களுக்கு சொந்த வாகனம் மீதுள்ள ஆர்வம் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் பெரும் நகரங்களிலியே தொழில் துவங்க பல நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அதனால் அந்த நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களும் அந்த நகரிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரு நகரங்களில் தான் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதை சமாளிக்க அரசு ஒருபுறம் முயன்று வரும் நிலையில், போக்குவரத்தை கட்டுப்படுத்த அட்டோமொபைல் துறை வல்லுநர்களும் பல தொழிற்நுடப்பங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை பார்க்கும் போது இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெருக்கடியே தேவலாம் போல தோன்றும். அவ்வளவு அதிக அளவு போக்குவரத்து நெருக்கடியை சில வெளிநாட்டு மக்களும் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து கீழே இறங்கும் பகுதி இருக்கிறது. இது முற்றிலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு என இருக்கும் பகுதி.

இந்த பகுதியில் வாகனங்கள் வரும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி உலக மக்களை அச்சரியப்படுத்தும். அந்த பாலத்தில் இருந்து அருவி கொட்டுவது போல அதிக அளவு டூவிலர்கள் வருவதை பார்க்க முடியும். அந்த வீடியோவை நீங்களும் கீழே பாருங்கள்.
வாகனங்கள் அருவி போல் வரும் இந்த வீடியோ தான் உலக அளவில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி குறித்து பலரை பேசவைத்துள்ளது. தைவான் நாட்டில் ஸ்கூட்டர் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அங்கே மக்கள் ஸ்கூட்டரில் தான் அதிகம் பயணம் செய்கின்றனர்.

இந்த வீடியோவில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? எவ்வளவு டிராபிக் இருந்தாலும் சிக்னல் போடுவதற்கு முன்னாள் மக்கள் அனைவரும் சாலை விதியை மதித்து சரியான இடத்தில் நிற்பர்.

அதே போல் செல்வதற்கான சிக்னல் கிடத்தபின்பு ஒருவரை ஒருவர் முந்தாமல், ஒருவர் மீது ஒருவர் மோதாமல் மிக சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் கடந்து செல்லுவர். எல்லோரும் ஒரே வேகத்தை கடைப்பிடிப்பர்.

யாரும் தனியாக வேகமாக செல்லவில்லை. போக்குவரத்து விதியையும் நம்முடன் அதே சாலையில் பயணிக்கும் மற்றொறு வாகன ஒட்டியின் பாதுகாப்பையும் அவர்கள் புரிந்து செயல்படுகின்றனர்.

இதுவே இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு நகரில் இவ்வாறாக டிராபிக் ஏற்பட்டால் சிக்னல் கிடைத்ததும் ஒருவரை ஒருவர் முந்துக்கொண்டு, அதனால் ஒருவர் மீது ஓவர் மோதியும் பெரிய களோபரமே நடந்திருக்கும்.

மேலும் இந்த வீடியோவில் இன்னோரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்கலாம். இந்த வீடியோவில் எத்தனை வாகனங்கள் வந்தாலும் அந்த வாகனங்களில் வரும் அத்தனை பெரும் ஹெல்மெட் போட்டுக்கொண்டே வண்டியை ஓட்டுகின்றனர்.

இந்த வீடியோவில் ஒருவர் கூட ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை நீங்கள் பார்க்கமுடியாது. இவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது. இந்தியாவில் இன்னும் பலர் ஹெல்மெட் அணியாமலேயே வாகனம் ஓட்டுகின்றனர்.

இதேபோல இந்த ரோட்டின் மறுபுறம் செல்ல நினைக்கும் சிலர் மட்டும் தனியாக நின்று மற்ற வாகனம் செல்லும் வரை காத்திருக்கின்றனர். எவ்வளவு டிராபிக் இருந்தாலும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்நாட்டு அரசை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

வெளிநாடுகளுக்க நிகராக இந்தியாவை மாற்ற நினைக்கும் நாம் மாற்றத்தை முதலில் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சரியாக இருக்கும்பட்சத்தில் எல்லாம் சரியாக அமையும். இவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








