டிராஃபிக் அபராதங்களுக்கு 80% தள்ளுபடி! நகை கடை, துணி கடை மாதிரி இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்களே!
சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டிராஃபிக் அபராதங்களை செலுத்த 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மக்கள் பலர் தள்ளுபடி விலையில் அபராதங்களை கட்டிய நிலையில் தற்போது இதே யுக்தியை ஓடிசா மாநில அரசும் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓடிசா மாநில அரசு தற்போது நிலுவையில் உள்ள டிராஃபிக் அபராதங்களை செலுத்த 80 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு நபருக்கு ரூ5000 நிலுவையில் இருந்தால் வெறும் ரூ1,000 செலுத்தி இந்த அபராதங்களை 0 ஆக்கிவிடலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த தள்ளுபடி கடந்த ஜூலை 31ம் தேதிக்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு மட்டுமே பொருந்தும். வாகன ஓட்டிகள் ஓவர் ஸ்பீடு, சிக்னல் ஜம்பிங், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது. அபாயகரமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து அபராதங்களையும் செலுத்த இந்த தள்ளுபடியை பயன்படுத்தலாம்.
அதே நேரம் இந்த போக்குவரத்து அபராதம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்தால் அதற்கு இந்த தள்ளுபடி பொருந்தாது. இதை மாநில அரசு ஒரு முறை வழங்கப்படும் வாய்ப்பாக மட்டுமே அறிவித்துள்ளது. இந்த திட்டம் முடிந்த பிறகும் அபராதம் நிலுவையில் இருந்தால் அந்த அபராத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.

அதே நேரம் சிறிய தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தில் பாதியை செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ500 அபராதம் விதிக்கப்பட்டால் அதற்கு ரூ250 கட்டணம் செலுத்தினால் போதும். அதே நேரம் அதிக வேகமாக பயணிப்பதற்காக ரூ1000 இலகு ரக வாகனங்களுக்கும், ரூ2,000 ஹெவி வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிறது.
80 சதவீத தள்ளுபடி என்பது ரூ5,000த்திற்கும் அதிக மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றவர்களுக்கு 50 சதவத தள்ளுபி விலை பெருந்தும், ரூ5,000 அபராதம் இருந்தால் அதற்கு ரூ1,000 கட்டணமாக செலுத்தினால் போதும்.

அதிக தொகை அபராதம் நிலுவையில் இருந்தால் வாகன ஓட்டிகள் ஒட்டு மொத்தமாக அதை செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். இது சிஸ்டத்தில் தேவையில்லாமல் கிடக்கிறது. இது ஒட்டுமொத்த வருவாயையும் பாதிக்கிறது. இந்த அபராத தொகையை குறைந்தால் இந்த நிலுவையில் உள்ள செல்லான்கள் கிளியர் செய்யப்படும். அதே நேரம் மீண்டும் மீண்டும் வாகன விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நிலுவையில் அதிக அபராத செல்லான்கள் இருப்பதால் அதை கையாள்வதற்கு அதே நேரம் மற்றம் வேலை பளு செலவாகிறது. இதை குறைப்பதன் மூலம் போக்குவரத்து துறைக்கு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும் என்பதால் அதை நோக்கமாக கொண்டும் இந்த அபராத தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலுவையில் உள்ள டிராஃபிக் அபராதங்களை செலுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகள் பாக்கி பணத்தை செலுத்திவிட முடியும். இதனால் பெரிய அளவில் அரசுக்கு பணம் வசூலாகும். செல்லான் பராமரிப்பிற்கான செலவும் குறையும். தமிழகத்திலும் இப்படியான திட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications









