நூற்றியொரு ஆண்டுகளை தொட்ட டிராஃபிக் சிக்னல்.. சுவாரஸ்யங்கள்

Posted By:

வாகனப் போக்குவரத்து நெரிசலில் மிதக்கும் நகரச் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கும், சாலை சந்திப்புகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போதைய டிராஃபிக் சிக்னல்களுக்கு வித்தாக அமைந்த முதல் டிராஃபிக் சிக்னல் அமைக்கப்பட்டு நூற்றியொறாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. தற்போதைய நகர வாழ்க்கையில் ஒன்றி போய் விட்ட டிராஃபிக் சிக்னல் விளக்குகள் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டூடுள் போட்ட கூகுள்

டூடுள் போட்ட கூகுள்

மின்சாரத்தில் இயக்கும் டிராஃபிக் சிக்னல் எனப்படும் போக்குவரத்து விளக்கு அமைக்கப்பட்டு நூற்றியொரு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை டூடுள் போட்டு இன்று கொண்டாடுகிறது கூகுள்.

 எரிவாயு விளக்கு...

எரிவாயு விளக்கு...

முதல்முதலாக லண்டன் பாராளுமன்ற கட்டடதத்தை சுற்றியுள்ள சாலைகளில், எரிவாயுவில் இயங்கும் விளக்குகளின் மூலம் சமிக்ஞை காட்டி போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.

நூற்றியொரு ஆண்டு நிறைவை கொண்டாடும் டிராஃபிக் சிக்னல்

1896ல் லண்டன் நகர போலீஸ் ஒருவர் பயன்படுத்திய சமிக்ஞை விளக்கில் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது.இதில், அந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார். அதைத்தொடர்ந்து, அதன் பயன்பாடு குறைக்கப்பட்டது.

அமெரிக்கரின் கண்டுபிடிப்பு

அமெரிக்கரின் கண்டுபிடிப்பு

இப்போது உலக அளவில் பயன்படுத்தப்படும் நவீன வகை போக்குவரத்து விளக்கு அமைப்பை அமெரிக்காவை சேர்ந்த லெஸ்டர் வயர் என்பவர் கண்டறிந்தார். 1912ல் இந்த புதிய போக்குவரத்து சிக்னல் சிஸ்டத்தை கண்டுபிடித்து வழங்கினார்.

முதல் மின்சார டிராஃபிக் சிக்னல்

முதல் மின்சார டிராஃபிக் சிக்னல்

லெஸ்டர் கண்டுபிடித்த டிராஃபிக் சிக்னல் சிஸ்டம் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 5ந் தேதி முதல் மின்சார டிராஃபிக் சிக்னல் அமெரிக்காவின் ஓஹியோ நகரின் க்ளெவ்லேண்ட் என்ற பகுதியில் அமைக்கப்பட்டது.

எச்சரிக்கை மணி

எச்சரிக்கை மணி

1920ல் டிராஃபிக் சிக்னலில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் இருக்கும் அம்பர் லைட் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்தனர்.

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு மரம்

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு மரம்

1998ம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றிற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிற்ப கலைஞர் உருவாக்கிய டிராஃபிக் சிக்னல் மரம் லண்டனில் உள்ள மார்ஷ் வால் மற்றும் ஸெட்ஃபெர்ரி சாலை சந்திப்பில் உள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.

Photo Credit: Wikipedia

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Google Doodle unveiled to commemorate the first ever set of traffic lights being installed.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark