பைக் ரோமியோக்களுக்கு "ஆப்பு" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...
பெங்களூருவில் அதிகமாக சத்தம்எழுப்பும் பைக்களின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்ய துவங்கியுள்ளனர். பறிமுதல் செய்த சைலன்சர்களை அவர்கள் அழித்து வருகின்றனர்.
பெங்களூருவில் அதிகமாக சத்தம்எழுப்பும் பைக்களின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்ய துவங்கியுள்ளனர். பறிமுதல் செய்த சைலன்சர்களை அவர்கள் அழித்து வருகின்றனர். அதிக சத்தம் எழுப்பி கொண்டு வேகமாக செல்லும் இளைஞர்களால் பாதிக்கப்படும் மக்களை ஆபத்தில் இருந்து காக்கும் வகையில் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இன்றை இளைஞர்களுக்கு வேகமாக அதிக சிசி கொண்ட பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். வேகமாக பைக்குகளை ஓட்டுவது அதிக சத்தம் வரும் படி பைக்குகளை ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறனர். இவர்கள் இவ்வாறு செய்வதால் மற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் ஏற்படுத்தும் சத்தம் மற்றவர்களுக்கு கவன சிதறல்களை ஏற்படுத்துகிறது.

இதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

முக்கியமாக வெளிமார்கெட்டில் கிடைக்கும் எக்ஸாட்களை மாட்டிக்கொண்டு அதிக சத்தங்களை எழுப்பும் விதமாக ரோட்டில் சில ரோமியோக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

அவர்களால் ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்க்க எக்ஸாட்களை மாற்றி பயன்படுத்துபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு போலீசார் அனுமதிக்கப்படாத எக்ஸாட்களை பயன்படுத்திவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அதில் உள்ள எக்ஸாட்களை அழித்தனர்.

தற்போது மீண்டும் பெங்களூரு போலீசார் இந்த செயலில் ஈடுபட துவங்கியுள்ளது. இவ்வாறாக அதிக சத்தம் வரும் எக்ஸாட்களை ராயல் என்பீல்டு பைக்கில்தான் அதிகம் சத்தம் வரும் வகையிலான எக்ஸாட்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
அதனால் தற்போது அதிக சத்தம் வரும் எக்ஸாட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் ஹீரோ கரிஷ்மா பைக்கிலும் இந்த தற்போது அதிகமாக காண முடிகிறது. மேலும் சிலர் பழைய ஆர்.எக்ஸ்100 பைக், உள்ளிட்ட சில பைக்குகளில் இதை செய்து வருகின்றனர். இவை எல்லாவற்றையும் பறிமுதல் செய்யும் பணியில் பெங்களூரு போலீசார் செய்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது
இவ்வாறு பறிமுதல் செய்யும் எக்ஸாட்களை போலீசார் அழித்தனர். அவ்வாறு செய்வது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றி மோட்டார் வாகன சட்டம் சொல்வது என்னவென்றால் இந்தியாவில் ஓடும் வாகனங்களில் உள்ள பொருட்கள் ஆர்சி புக்கில் குறிப்பிட்டது போல இல்லை

என்றால் அதை சட்டவீரோதமாக பைக்கை மாற்றியமைத்தாக கருதப்படும். இதற்கான தண்டனையாக அபராதம், வாகனம் பறிமுதல், ஆகியவற்றை செய்யலாம். மேலும் இந்த குற்றம் மீண்டும் மீண்டும் நடந்தால் இதை செய்பவரை கைது செய்யவும் அனுமதியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக ராயல் என்பீல்ஐ பைக்கில் அதிகமாக நடக்கிறது. பிடிபடும் எக்ஸட்களில் ராயல் என்பீல்டு பைக்கில் மாற்றப்பட்ட எக்ஸாட்கள் தான் அதிகம் என போலீசார் அவர்களிடம் பதிவாகியுள்ள தகவல்களை வைத்து சொல்லுகிறார்கள்.

வெளி மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் எக்ஸட்கள் ரோட்டில் வாகனத்தை ஓட்ட பயன்படுவதற்காக இல்லை. இதை ஆஃப் ரோட்டில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அல்லது இதை தனியார் ரோடுகளில் பயன்படுத்தலாம்.

அதாவது பைக் ரேஸ் ஓட்டுபவர்ள் தங்கள் ரேஸ் டிராக்கில் பயன்படுத்த இந்தவகையிலான எக்ஸாட்களை பயன்படுத்த வேண்டும். அந்த இடங்களில் இந்த மாதிரியான எக்ஸட்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








