சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

குறிப்பாக பழைய வாகனங்கள்தான் (Old Vehicles), சுற்றுச்சூழலை மிகவும் கடுமையாக மாசுபடுத்துகின்றன. எனவே என்சிஆர் என சுருக்கமாக அழைக்கப்படக்கூடிய டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR- National Capital Region), 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ஜிடி என அழைக்கப்படும் தேசிய பசுமை தீர்ப்பாயம்தான் (NGT - National Green Tribunal) இந்த தடை உத்தரவை கொண்டு வந்தது.

சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!

வெச்சாங்க பாருங்க செக்!

தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கும் பதிவு (Registration) புதுப்பிக்கப்படாது. எனவே வயதான பழைய வாகனங்களை அங்கு இயக்க முடியாது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாகவே, இத்தகைய கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி, நிறைய பேர் தங்களது பழைய வாகனங்களை சாலையில் ஓட்டி கொண்டுள்ளனர்.

அவர்களுக்கெல்லாம் செக் வைக்கும் வகையில் தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை போக்குவரத்து காவல் துறையினர் தொடங்கியுள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, பதிவு காலாவதியான பிறகும் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டுள்ளவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டா போக்குவரத்து காவல் துறையினர்தான், அதிரடி நடவடிக்கையையை தொடங்கியுள்ளனர். நொய்டா நகரானது, டெல்லிக்கு அருகே அமைந்துள்ளது. எனவே டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் நொய்டா வருகிறது.

சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!

இத்தனை கார்களை தூக்க போறாங்களா!

இதன் காரணமாகவே பழைய வாகனங்கள் மீது நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். நொய்டாவில் சுமார் 1.20 லட்சம் கார்களின் பதிவு காலாவதியாகியுள்ளது. அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கார்களை எல்லாம் பறிமுதல் செய்து, ஸ்கிராப் (Scrap) செய்வதற்கு நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஸ்கிராப் செய்வது என்றால், அழிப்பது ஆகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

அத்துடன் சாலைகளிலும், நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த 1.20 லட்சம் கார்களில், 23 கார்கள் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருபவை ஆகும். அதாவது நீதிமன்றம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தங்களது நிலைப்பாட்டை நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் தெளிவுபடுத்தி விட்டனர். உயர் அதிகாரிகள் என்பதால், அவர்களின் கார்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.

கலக்கத்தில் உரிமையாளர்கள்!

இதுபோன்ற எச்சரிக்கையையும் மீறி பழைய வாகனங்களை இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் ஏற்கனவே கூறியபடி கார் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையால், பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பேசாம அதுக்கு மாறிடுவோம்!

எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான நடவடிக்கை நாடு முழுக்க இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாற தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter), எலெக்ட்ரிக் கார் (Electric Car) என அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Traffic police to scrap 1 20 lakh cars check all the details here
Story first published: Wednesday, February 1, 2023, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X