ரயில்ல போகும் போது உசுர கையில புடிச்சிட்டு தான் போகனும் போல! இந்த வருஷம் மட்டும் இத்தனை விபத்துக்களா
இந்தியாவில் சமீப காலமாக ரயில் விபத்துகளில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று சென்னை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் பெரிய அளவில் உயிரிழப்புகள் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இப்படியாக ரயில் விபத்துக்கள் நடக்க காரணம் என்ன இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில்வே துறை மிக முக்கியமான துறையாக இருக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. ரயில் பயணம் குறைவான கட்டணத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள சிறந்த வழி என்பதால் மக்கள் பல ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீப நாட்களாக இந்தியாவில் நடக்கும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் நடந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 40 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 313 பயணிகள் உயிரிழந்துள்ளார்கள். இதுபோக நான்கு ரயில்வே ஊழியர்களும் உயிரிழந்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளிலேயே 2023-24ம் நிதியாண்டில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 719 பயணிகளும், 29 ஊழியர்களும் உயிரிழந்துள்ளார்கள். இது 638 ரயில் விபத்துகளில் நடந்த சம்பவம் ஆகும். இந்நிலையில் நேற்று சென்னை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று இரவு பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய பாஹ்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது லூப் லைனுக்கு மாறி அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து இருந்ததாகவும் கூறப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக ரயில் மெதுவாக சென்றதால் பயணிகளுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் மோதல் பயங்கரமாக இருந்ததால் ரயிலில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதனால் பகுதியில் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிரிழப்பின்றி காப்பாற்றப்பட்டார்கள். ஒரு சில பெயர்களுக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பயணிகளுக்கு முதலில் முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் இப்படியாக தான் கஞ்சன்ஜூங்கா ரயில் விபத்து நடந்தது இந்த ரயில்வே விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது இதில் 293 உயிரிழந்தார்கள் 1200 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
இப்படியாக கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த ரயில்வே புத்தகங்கள் எல்லாம் தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனித தவறுகள் தான் காரணமாக இருந்திருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் ரயில் விபத்து என்பது அதிக எண்ணிக்கையிலான மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகும்.
ரயில் விபத்துக்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே கவச் என்ற தொழில்நுட்பத்தை தயாரித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது. ஆனால் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் பல்வேறு சுணக்கங்களை ரயில்வே நிர்வாகம் சந்தித்து வருகிறது. இந்த கவர் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் உள்ள ரயில்களிலும் ரயில் பாதைகளிலும் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் ரயில் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கிறது. உலகில் நான்காவது மிகப் பெரிய நெட்வொர்க்கான ரயில்வே இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இப்படியான ரயில் விபத்துக்கள் அதிகம் நடப்பது சரியான நடைமுறையல்ல. இதை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் அதிகமான ரயில் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









