சாலையில் திடீரென நுழைந்த ரயில் எஞ்ஜின்... அதிர்ச்சியில் பொதுமக்கள் - வீடியோ !
ரயில் எஞ்ஜின் ஒன்று தானாக சாலையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாத, வித்தியாசமான செயல்கள் சிலவற்றை இந்தியச் சாலைகளில் நம்மால் காண முடியும். இதனை உறுதி செய்யும் விதமாக, முன்னதாக பல்வேறு சம்பவங்கள் இந்தியச் சாலைகளில் அரங்கேறியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில், முன்னதாக இந்திய ராணுவம் பயன்படுத்தும் டேங்கர் எனப்படும், ஆயுதமேந்திய வாகனம், திடீரென சாலையில் தோன்றி, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த செய்தியைகூட நாம் பார்த்திருப்போம். தற்போது, அதேபோன்று ஓர் விநோதமான சம்பவம் இந்தியச் சாலையில் நிகழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில்தான் அது அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில், இந்திய ரயில்வேத்துறைக்குச் சொந்தமான, ரயில் எஞ்ஜின் ஒன்று நடுவீதிக்கு வந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது திடீரென சாலையில் தோன்றியதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும், ரயில் பாதைகளை கடக்கும் வாகனங்கள் முன்னேற முடியாமல் சிக்கி தவிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு மாறாக, ரயில் எஞ்ஜின் ஒன்று சாலையில் சிக்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த ரயில் எஞ்ஜினை இயக்கிவந்த பைலட், ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும்விதமாக இயக்கி வந்துள்ளார். ஆனால், பணிமனை ஊழியருக்கும், அவருக்கும் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, எஞ்ஜினை அருகில் இருந்த யார்டிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது.

அப்போது, கேட் மூடப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த எஞ்ஜின் சிறிது சிறிதாக நகர்ந்து போபோட்டி க்ராஸ்ஸிங் என்ற பகுதியை அடைந்துள்ளது. அப்போது, அங்கு வந்த ராணுவ வீரர்கள் சிலர், ரயில் எஞ்ஜின் மேலும் நகராத வண்ணம் நிறுத்தியுள்ளனர். இதனால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில் எஞ்ஜினின் பைலட், ஏன் அதனை அங்கேயே விட்டுவிட்டு புறப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அதே சமயம், அந்த எஞ்ஜின் தனித்துவிடப்பட்ட இடமானது, அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது. மேலும், இச்சம்பவம் அதிக வாகனங்கள் வந்து செல்லக்கூடிய அலுவல் நேரத்திலேயே அரங்கேறியுள்ளது.

இருப்பினும், திடீரென தோன்றிய இந்த ரயில் எஞ்ஜினால், அப்பகுதியில் எந்தவொரு பாதிப்பும் அரங்கேறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பதற்றம் நீடித்தது.

மேலும் சம்பவத்தின்போது, போக்குவரத்தைக் கட்டுபடுத்த போக்குவரத்து அதிகாரிகள் யாரும், அப்பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, அங்கு போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் நீடித்தது.

உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்துத்துறையாக இந்திய ரயில்துறை இருக்கின்றது. இது நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. பல இந்தியர்களின் முக்கிய போக்குவரத்தாகவும் இருக்கின்றது. அதேசமயம், நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான போக்குவரத்தாகவும் இது உள்ளது.

ரயில் பயணங்கள் முன்பைக் காட்டிலும், தற்போது பாதுகாப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. இருப்பினும், தற்போது அரங்கேறியுள்ள இந்த பாதுகாப்பற்ற சம்பவம், மக்களிடையே பீதியை அடைய செய்துள்ளது. ஆனால், இதற்கு அதிகாரிகள் மற்றும் பணியில் இருந்த பைலட்டே முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஆகையால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, ரயில்வே துறைசார்பில் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








