மிடில் பெர்த் கழன்று விழ என்ன காரணம்? இதை பண்ணா தப்பிச்சிருக்கலாம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருக்கு மிடில் பெர்த் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காயமடைந்த பெண் காயத்துடனேயே ரயிலில் பயணம் செய்த கொடூரமும் நடந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? இதை தடுப்பது எப்படி? ரயில் பயணத்தின் போது காயமடைந்தால் தப்பிப்பது எப்படி? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு நோட்டி கடந்த மே 12ம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் சிலீப்பர் கோச்சில் புக் செய்து ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு கீழ் பெர்த் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிடில் பெர்த் மற்றொரு நபருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் ஜோலார் பேட்டையை தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது மிடில் பெர்த்தில் படுத்திருந்தவ் கழிவறைக்கு செல்வதற்காக மிடில் பெர்த்தில் இருந்து இறங்கினார். இப்பொழுது எதிர்பாராத விதமாக மிடில் பெர்த் கழன்று விழுந்தது. இதில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த பெண்ணில் தலையில் மிடில் பெர்த் விழுந்து இடித்ததால் அந்த பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் அலறிதுடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவம் தெரிந்து டிடிஆரிடம் முறையிட்டனர்.
அந்த பெண்ணிற்கு உதவ ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லாமல் இருந்துள்ளது. நல்லவேலையாக டிக்கெட் பரிசோதகர் அடுத்த பெரிய ஸ்டேஷனான சேலம் ஜங்ஷன் ஸ்டேஷனில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் ரயில் வருவதற்குள் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ரயில் சேலம் ஜங்ஷன் வந்ததும் காயமடைந்த பெண் ரயிலில் இருந்து இறங்கி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் சம்பவம் நடந்த பெட்டியை சோதனை செய்து பார்த்த போது குறிப்பிட்ட சம்பவம் நடந்த இடத்தில் மிடில் பெர்த் லாக் சரியாக இருந்துள்ளது. அந்த லாக்கை சரியாக போடததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். அதனால் இனி ரயிலில்பயணம் செய்யும் பயணிகள் மிடில் பெர்த்தை பயன்படுத்தும் போது லாக் சரியாக இருக்கிறதா என சோதனை செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய ரயில்வே ரயில்கள் மிடில் பெர்த்திற்கு லாக்கிற்காக செயின் லாக் பயன்படுத்தப்படுகிறது.மேல் பெர்த்திலிருந்து இரண்டு செயின்கள் தொங்க விடப்பட்டிருக்கும். அதில் முனையில் லாக் செய்வதற்கான ஆங்கர்கள் இருக்கும். தேவைப்படும் நேரம் மிடில் பெர்த்தை தூக்கி விட்டு இந்த செயினின் முனையில் உள்ள ஆங்கரை பயன்படுத்தி மிடில் பெர்த் உடன் லாக் செய்ய வேண்டும் ரயில் பெட்டிகளில் அதன் வகையை மற்றும் ரயிலை பொருத்து இந்த லாக் டைப் மாறுபடுகிறது.

பெரும்பாலும் ப வடிவ லாக், மற்றும் பட்டன் வடிவ லாக் பயன்படுத்தப்படுகிறது. இதில் ப வடிவ லாக் என்றால் செயிலில் ப வடிவில் கொக்கி இருக்கும். இதை பொருத்துவதற்கு ரயில் பெட்டியில் உள்ள மிடில் பெர்த்தில் இடம் இருக்கும். அதில் பொருத்திக்கொள்ள வேண்டும். மற்றொன்று பட்டன் வகை லாக் இருக்கிறது. இது செயினில் ஓட்டை இருக்கும் இதில் பெர்த்தில் இருக்கும் பட்டனை உள்ளே செலுத்தி கீழே தொங்க விட்டால் லாக்காகிவிடும்.
ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் மிடில் பெர்த்தை பயன்படுத்தினால் அதை சரியாக லாக் செய்து விட்டு பின்னர் அதில் ஏற வேண்டும். ஏறுதற்கு முன்னர் ஒன்று இரண்டு முறை சரியாக லாக்காகி உள்ளதா என சோதனை செய்து கொள்வது நல்லது. ரயிலில் மிடில் பெர்த் இது போன்ற பிரச்சனை வரக்கூடாது என்றால் அதன் லாக் ஸ்டிராங்காகவும், அதே நேரம் சிம்பிளான லாக் மூலமும் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக பிரச்சனையை இதுவரை பெரிய அளவில் ஏற்படுத்தியதில்லை.
ஒரு வேளை நீங்கள் பயணிக்கம் போது இப்படியாக மிடில் பெர்த் விழுந்து உங்களுக்க பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக டிக்கெட் பரிசோதகர்களிடம் தெரிவிக்கவும், அவர்கள் கண்ட்ரோலில் ஒரு முதலுதவி பெட்டி இருக்கும். அது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது மட்டுமல்லாமல் நீங்கள் காயமடைந்தவுடன் ரயில் மதாத் மற்றும் உங்கள் செல்போனிலிருந்து 138 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கூறினால் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் பயணிகள் பலர் மிடில் பெர்த்தில் சில அசெளகரியங்களை சந்திக்கின்றனர். இருந்தாலும் இதில் பொருத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பம் சிறப்பானதாகவே இருக்கிறது. இதனால் நீங்கள் இனி ரயிலில் பயணிக்கும் போது மிடில் பெர்த் சரியாக லாக்காகி உள்ளதா என்பதை செக் செய்து பின்னர் பயணிப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications









