புக் பண்ண ஸ்டேஷனை தாண்டி இறங்கனுமா?. இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன?

இந்தியன் ரயில்வே நிர்வாகம் தன்னுடைய பயணிகளுக்கு மிக சுலபமான மற்றும் எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், புக் பண்ண ஸ்டேஷனை தாண்டி பயணிப்பதற்கான பயண நீட்டிப்பு திட்டத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பயணிகளுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியன் ரயில்வேஸ் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் பல்வேறு புதிய வசதிகளை இந்தியன் ரயில்வேஸ் கடந்த காலங்களில் அறிமுகம் செய்திருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் புக்கிங் செய்த டிக்கெட்டில் புக் செய்த தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் வேறு ஒரு தேதிக்கு மாற்றி பயணிக்கும் வசதியை இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

இதுபோன்று எண்ணற்ற சிறப்பு வசதிகளை சமீப சில நாட்களாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளுக்காக அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிதாக ஓர் சூப்பரான வசதியையும் இந்தியன் ரயில்வேஸ் அறிமுகம் செய்து உள்ளது. 'டிக்கெட் எக்ஸ்டென்ட் சர்வீஸ்' (Ticket Extend Service) எனும் திட்டத்தையே அது அறிமுகம் செய்து இருக்கின்றது. ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனுக்கு ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்வதே இந்த திட்டத்தின் சிறப்பாகும்.

ஓர் பயணி தான் இறங்க வேண்டிய ஸ்டேஷனையும் தாண்டி பயணிக்க விரும்பினால் அதற்கான அனுமதியை இந்த திட்டத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதியையே இந்தியன் ரயில்வேஸ் தற்போது தனது பயணிகளுக்காக அறிமுகம் செய்திருக்கின்றது. இதை பெற என்ன செய்ய வேண்டும்?, டிக்கெட் கவுன்டருக்கு போக வேண்டுமா?, அந்த அளவுக்கு எல்லாம் அலைய வேண்டியதில்லை. டிடிஇ-யை அணுகினாலே போதும்.

அவரிடம் உங்கள் பயணத்தை நீட்டிப்பதற்கான கோரிக்கையை முன் வைக்கலாம். நம் தேவையை அவர் பூர்த்தி செய்துக் கொடுப்பார். அதேவளையில், தங்களின் கோரிக்கைக்கான நியாயமான காரணத்தையும் நீங்கள் அவரிடம் முன் வைக்க வேண்டும் என்பது விதி ஆகும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் மட்டுமே டிடிஇ தொடர்ந்து நீங்கள் விரும்பும் அடுத்த ஸ்டேஷன் வரை பயணிக்க அனுமதிப்பார். முதல் முறையாக வெளியூர் செல்பவர்கள் தவறுதலாக இறங்கும் ஸ்டேஷனை மாற்றி விண்ணப்பிக்கும் சூழல் நிலவுகின்றது.

இந்த மாதிரியானோர்க்கு டிக்கெட் எக்ஸ்டென்ட் சர்வீஸ் திட்டம் மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது இலவச சேவை இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம், இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. பாயிண்ட்-டூ-பாயிண்ட் திட்டத்தின் அடிப்படையில் இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக நீங்கள் வாங்கிய ரயில் டிக்கெட்டின் விலைக்கு இணையான தொகையை பயண நீட்டிப்பிற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

உதாரணமாக நீங்கள் சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வரை பயணிப்பதற்கான டிக்கெட்டை எடுத்திருக்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் எவ்வளவு கட்டணத்தைச் செலுத்தினீர்களோ அதே தொகையை பயண நீட்டிப்பிற்காக வழங்க வேண்டும். இதை செலுத்தும் பட்சத்திலேயே உங்களால் நீங்கள் விரும்பிய அடுத்த ஸ்டேஷன் வரை பயணிக்க முடியும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போதைக்கு இந்த திட்டம் முன் பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பயண நீட்டிப்பு கோரிக்கை, இருக்கை காலியாக இருக்கும் என்றால் மட்டுமே முன் வைக்க முடியுமாம். பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன. நாள்தோறும் லட்சக் கணக்கிலான பயணிகளை ரயில்கள் ஏற்றிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. இவர்களின் பயணம் எளிமையானதாகவும், இனிமையானதாகவும் மாற்றிக் கொடுக்கும் பணியிலேயே இந்தியன் ரயில்வேஸ் தற்போது தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட மிக சிறப்பான திட்டமாகவே டிக்கெட் எக்ஸ்டன்ட் சர்வீஸ் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தைப் போலவே அண்மையில் கவுண்டரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டை செல்போன் வாயிலாகவும் காண்பிக்கலாம் எனும் சூப்பரான திட்டத்தை இந்தியன் ரயில்வேஸ் அறிமுகப்படுத்தியது. ஒரு சிலர் பல வாரங்களுக்கு முன்னரே தங்களின் பயணத்திற்கான டிக்கெட்டை புக் செய்துவிடுவதால் அதை பத்திரமாக வைத்துக் கொள்வதில் தவறிவிடுகின்றனர். இந்த மாதிரியான நேரங்களில் செல்போனில் டிக்கெட்டின் படத்தை எடுத்து, அதை வைத்துக் கொண்டு பயணிக்கலாம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 31, 2022, 16:36 [IST]
English summary
Train ticket extend service
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+