ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட்டின் விலை உயரப்போகுதா? எவ்வளவு அதிகமாகப்போகுது தெரியுமா?
இந்திய ரயில்வே நிர்வாகம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட்களின் விலைய உயர்த்தப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சரித்திரத்திலேயே இல்லாத வகையில் மிககுறைவான விலை உயர்வையே அறிவிக்கப்போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதன்படி ரயில் டிக்கெட்களின் விலை எவ்வளவு உயரப்போகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வரும் ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டிற்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் டிக்கெட்களின் விலையை உயர்த்தப்போவதாக ரயில்வே வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தினமும் இந்தியாவில் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் அத்தனை ரயில்களிலும் இந்த விலையேற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விலையேற்றத்தின் படி ஏசி வகுப்பு டிக்கெட்டிற்கு ஒரு கி.மீக்கு 2 பைசா டிக்கெட் விலை உயரும், அதே போல ஏசி அல்லாத நார்மல் சிலீப்பர் பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் விலை கி.மீக்கு 1 பைசா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல முன்பதிவில்லாத பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் விலை 500 கி.மீ வரை எந்த மாற்றமும் இல்லை எனவும்,அதற்கு மேல் பயணிக்கும் போது அரை பைசா விலையேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் நீங்கள் இப்பொழுது சுமார் 500 கி.மீ தூரம் செல்ல ரயிலில் பயணிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். தற்போது நீங்கள் அதற்காக செலுத்தும் டிக்கெட் கட்டணத்தை விட ஏசி பெட்டியில் பயணித்தால் கி.மீக்க 2 பைசா என கணக்கிட்டால் ரூ10 கூடுதலாக வரும். இதுவே ஏசி அல்லாத பெட்டியில் 1 பைசா விலை உயர்வு என கணக்கிட்டால் ரூ5 கூடுதலாக வரும்.

இது போக முன்பதிவில்லாத பெட்டியில் 500 கிமீ வரை எந்த கட்டண உயர்வும் இருக்காது. மாறாக 600 கி.மீ பயணிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அரை பைசா என கணக்கிட்டால் ரூ3 கூடுதலாக வரும். இது மிக குறைவான விலையேற்றமாக தான் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இப்படியாக விலை உயர்வு கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அறிவிக்கப்பட்ட விலை உயர்வில் சாதாரண முன்பதிவில்லாத பெட்டியில் பயணிக்க கி.மீ 1 பைசா விலை உயுர்வும், எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவில்லாத கட்டணத்தில் கி.மீக்கு2 பைசா விலை உயர்வும், சிலீப்பர் வகுப்பில் பயணிக்க கி.மீக்கு ரூ2 பைசா விலை உயர்வும், ஏசி பெட்டியில் பயணிக்க ரூ4 பைசா விலை உயர்வும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஓப்பிடும் போது தற்போது விலை உயர்வு குறைவு தான்.

தற்போது அறிவிக்கப்படவுள்ள விலை உயர்வில் சப் -அர்பன் ரயில் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என பேசப்படுகிறது. இது போக சீசன் டிக்கெட் விலையிலும் மற்றங்கள் இருக்காது. முன்பதிவு செய்து செல்லும் ரயில்களின் டிக்கெட் விலையிலும், நீண்ட தூரம் முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக ரயில் டிக்கெட்விலையை உயர்த்தும் தகவலை ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது சமூகவலைத்தளங்களில் நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் வரும் கருத்துக்கள் தான். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மிக குறைவாகவே விலை உயர்வு இருப்பதால் இது மக்களை பெரிய அளவில் பாதிக்காது என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









