டில்லியில் பெரிய ரயில் விபத்தை தடுத்த சிறிய ஆட்டோமெட்டிக் கருவி! இது சூப்பர் டெக்னாலஜில!

டெல்லி அருகே விபத்தில் சிக்கும் சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலை தானியங்கி தொழில்நுட்பம் ஒன்று ரயிலில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்ததால், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மிகப்பெரிய ரயில் விபத்தை தடுத்துள்ளனர். இதனால் ஏராளமான உயிர்கள் தப்பி உள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் பகுதியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள ஜோக்பாணி என்ற பகுதிக்கு சீமாச்சல் என்ற எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சரியாக உபி மாநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது. ரயிலில் உள்ள எஸ்3 பெட்டியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்து உள்ளார்கள்.

எஸ்3 பெட்டியில் உள்ள வீல்கள் எல்லாம் அதிக சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் இப்படியாக ரயில் வீல்களில் அதிக சூடு ஏற்படுவதை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்காணிப்பு கருவிகள் ரயில் வீல்கள் அளவுக்கு அதிகமாக சூடாக இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தானியங்கி தொழில்நுட்பமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில் சூனார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ரயில் வீல் வெப்ப கண்காணிப்பு கருவியில் இது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக ரயிலை அடுத்த ரயில் நிலையத்திலேயே நிறுத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி ஜிகினா என்ற ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது.

பின்பு அங்கு பிரச்சனைக்குரிய பெட்டி கண்டறியப்பட்டு அந்த பெட்டி ரயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பாக்கி பெட்டிகள் ரயிலுடன் இணைக்கப்பட்டு பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிக்கு பதிலாக புதிய பெட்டி சேர்க்கப்பட்டு இந்த ரயில் பயணத்தை தொடர்ந்தது. இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் ரயில் கால தாமதமாக புறப்பட்டது.

ஹாட் ஆக்ஸில் பாக்ஸ் டிடெக்டர் என்ற கருவி ரயில் தண்டவாள பகுதிக்கு அருகே ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். இந்த தண்டவாள கண்காணிப்பு கருவி தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது அதன் ஆக்ஸில் பகுதியில் அதிக வெப்பம் இருந்தால் ரியல் டைமில் உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ரயில் ஆக்ஸில் பகுதியில் அதிக வெப்பம் ஏற்பட்டால் அதை கண்காணிப்பதற்கு வேறு கருவிகள் எதுவும் கிடையாது. இப்படியான பிரச்சனை சில நேரங்களில் மட்டுமே ஏற்படும். வாகனங்களில் அதிகமான லோடு இருந்தால், வீல் பேரிங் பழுதாகி இருந்தால் அல்லது வேறு விதமான மெக்கானிக்கல் பிரச்சினை இருந்தால் இப்படியான கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக வீல் பேரிங் மற்றும் வீலுக்கு இடையே சரியான உராய்வு தன்மை இல்லை என்றால் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டு அதிக வெப்பம் ஏற்படும் இந்த அதிக வெப்பத்தால் ரயில் ஆக்ஸில் பகுதி முழுவதும் வெப்பமாகி விரிவடைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரயில் தடம் புரள கூட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனையை குறிப்பிட்ட கருவி கண்டுபிடித்து எச்சரித்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை வரவில்லை என்றால் ரயில் தொடர்ந்து பயணம் செய்து அதிக வெப்பம் ஏற்பட்டு ரயில் விபத்தில் சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏராளமான உயிர்களும் பலியாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்த பிரச்சனை முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக ரயில் ஆக்ஸில் பகுதியில் அதிக வெப்பம் ஏற்படும் ஏற்பட்டு எச்சரிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

இந்தியா முழுவதும் கடந்து 2020-21ம் ஆண்டில் மொத்தம் 7 சம்பவங்கள் இப்படியாக நடந்துள்ளன. அதில் பெரும்பாலும் சரக்கு ரயில்கள்தான் இப்படியான சம்பவத்தில் சிக்கியுள்ளது. 2021-22-ல் 9 சம்பவங்கள் நடந்துள்ளன. 2022-23 14 சம்பவங்கள் நடந்துள்ளன. 2023-24 ல் ஒரே ஒரு சம்பவம் மட்டும் நடந்துள்ளது. அதேபோல 2024-25 நடக்கும் முதல் சம்பவம் இதுதான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்கள் சேவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் பாதுகாப்பான சேவையாக இருக்க இப்படியான தொழிற்நுட்ப தேவை அவசியமாக இருக்கிறது. இந்த சம்பவம் நிச்சயம் ரயில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது. தொடர்ந்து இந்த தொழிற்நுட்பத்தை இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Note: Images are representative purpose only

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 12:17 [IST]
English summary
Train track hot axle box detector prevents accident in up
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+