ரயிலில் டாய்லெட் போகும் போது லக்கேஜை இந்த இடத்துல வச்சிட்டு போனா யாராலயும் திருட முடியாது!
ரயிலில் பயணிக்கும் போது பலர் தனியாக பயணிக்கிறார்கள். இப்படியாக பயணம் செய்யும்போது ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்த பலர் தயங்கி வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் வைத்து செல்லும் லக்கேஜ் யாராவது திருடி சென்று விட்டால் என்ன செய்வது என குழம்பி வருகின்றனர். இப்படியான நேரங்களில் எப்படி லக்கேஜ் திருடப்படாமல் பாதுகாப்பாக நாம் கழிவறை பயன்படுத்தலாம் என்பதை தான் இங்கு காணப் போகிறோம்.
இந்தியாவில் ரயில்வே துறை மிகப் பெரிய போக்குவரத்து துறையாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலும் முன்பதிவு செய்த பயணப்பெட்டிகளிலேயே பயணிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள். இப்படியாக பயணம் செய்யும்போது தனியாக பயணம் செய்யும் நபர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் கழிவறையை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ் தான் இந்த லக்கேஜை எடுத்துக்கொண்டு அவர்கள் கழிவறைக்கு செல்ல முடியாது. அதே நேரம் லக்கேஜ் வைத்து விட்டு சென்றாலும் திரும்பி வரும் போது லக்கேஜ் திருடப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. இதனால் பலர் கழிவறையை பயன்படுத்துவதை தவிர்த்து கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டால் சில டிரிக்குகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எளிதாக கழிவறையை பயன்படுத்த முடியும். தனியாக பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயிலில் திருட்டு பயம் என்பது இருக்கத்தான் செய்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இதில் இருந்து தப்பிக்க சில வழிகளும் இருக்கிறது. அதைப்பற்றி தான் நாம் இங்கே விரிவாக பார்ப்போம்.

முதல் டெக்னிக் நீங்கள் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது கழிவறையை பயன்படுத்துவதை விட ரயில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் போது கழிவறையை பயன்படுத்தலாம். இப்படியான நேரங்களில் ரயிலில் இருந்து யாரும் வெளியே தப்பி செல்வது என்பது முடியாத காரியம் ஆகும். அதனால் இந்த நேரத்தில் நீங்கள் கழிவறையை பயன்படுத்தினால் அதை தருணத்தை திருடர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும்.
பெரும்பாலும் திருடர்கள் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது பொருளை திருடிக் கொண்டு உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறவே நினைப்பார்கள். ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர்கள் ரயிலைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாது என்பதால் அந்த நேரத்தில் திருட்டில் ஈடுபட தயங்குவார்கள். இது ஒரு பக்கம் தான் என்றாலும் மற்றொரு பக்கம் திருடர்களுக்கு கடினமான இடத்தில் பொருளை வைப்பது இன்னொரு டெக்னிக் இருக்கிறது.

ரயிலில் நீங்கள் பயணிக்கும் போது அப்பர் பெர்த்தில் ஜன்னல் சீட்டுக்கு அருகே உங்கள் லக்கேஜ்களை வைத்து விட்டால் திருடர்கள் நீங்கள் இருக்கும் பே வழியாக வந்து அப்பர் பேர்த்தில் இருக்கும் உங்கள் லக்கேஜை எடுப்பது என்பது கடினமான விஷயமாகும். மற்ற அனைத்து பெர்த்களிலும் அவர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்து கையை நீட்டி எடுத்து விடலாம். ஆனால் அப்பர் பெர்த்தில் ஜன்னலோரம் இருக்கும் லக்கேஜை எடுப்பது கடினம்.
இதனால் நீங்கள் அந்த பக்கம் லக்கேஜை வைத்துவிட்டு கழிவறைக்கு செல்லலாம். இதனால் உங்கள் லக்கேஜ் திருடப்படும் வாய்ப்பு மிக குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் தனியாக பயணம் செய்யும்போது பெரும்பாலும் அப்பர் பெர்த்தில் இருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்வது சிறந்தது. இதனால் உங்கள் லக்கேஜ் திருடப்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.
இது மட்டுமல்ல ரயில் மெதுவாக செல்லும்போது ரயில் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் எக்காரணத்தை கொண்டும் உங்கள் லக்கேஜை விட்டுவிட்டு தனியாக சென்று விடாதீர்கள். அந்த நேரத்தில் தான் திருட்டு அதிகமாக நடக்கிறது. இந்தியாவில் பதிவான ரயில் நிலைய திருட்டுகளில் ரயில் நிற்கும்போது திருடப்பட்ட சம்பவங்கள் தான் அதிகம். இதனால் அடுத்த முறை ரயிலில் நீங்கள் தனியாக பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது தனியாக பயணம் செய்வது என்பது ஒருவகையில் ஆபத்தான விஷயம் என்றாலும், அதை தவிர்ப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. மேலே உள்ள வழிகளை பின்பற்றி நீங்கள் தனியாக பயணம் செய்யும்போது கழிவறையை பயமில்லாமல் பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனை தரும்.


Click it and Unblock the Notifications









