திருநங்கை நமீதா தானே இது! இப்ப இவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கிட்டாங்களே! காரை பற்றி தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான திருநங்கை நமிதா மாரிமுத்து தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். மாடலிங் துறையில் பிரபலமான இவர் இந்த காரை வாங்கியது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழில் தனியார் தொலைகாட்சி நடத்தி வரும் பிக்பாஸ் தொடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நமிதா மாரிமுத்து, திருநங்கையான இவர் மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு மாடலிங் துறையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளது தெரிகிறது. நேரடியாக மஹிந்திரா ஷோரூமிற்கு சென்று அங்கு தனக்கு பிடித்த மஹிந்திரா 3எக்ஸ்ஓ காரை வாங்கி டெலிவரி எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபலமாக மாறி வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 3எக்ஸ்ஓ கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வீடியோவின்படி அவர் சிட்ரைன் மஞ்சள் நிற காரை வாங்கியுள்ளார். இந்த கலர் இந்த காரில் பிரபலமான கலர்களில் ஒன்றாக இருக்கிறது. பலர் இந்த கலரில் தான் மஹிந்திரா 3எக்ஸ்ஓ காரை வாங்கி வருகின்றனர்.

இந்த கலரை பொருத்தவரை மஹிந்திரா 3எக்ஸ்ஓ காரின் ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ் 5 எல் ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த வேரியன்ட்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இதில் நமிதா வாங்கியது ஏஎக்ஸ் 5 பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் என தெரிகிறது.
இந்த காரை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது மேனுல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 82kW பவரையும், 200 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 18.89 கி.மீ மைலேஜை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 8 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பைனயாகி வரும் நிலையில் நமிதா இனித் சிட்ரைன் மஞ்சள் நிற காரை வாங்கியுள்ளார். இந்த கார் பலருக்கு கனவாக இருக்கும் நிலையில் இந்த காரை நமீதா வாங்கியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ11 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் 3எக்ஸ்ஓ கார் இந்தியாவில் பிரபலமான காராக மாறி வருகிறது. இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார் நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம். நமீதா இந்த காரை வாங்கியுள்ளது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









