அதிரடியான புதிய உத்தரவுகளை பிறப்பித்த அரசு.. இனி நீங்கள் இதை செய்தால் கடும் சிக்கலில் சிக்க நேரிடும்
அதிரடியான புதிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக மிக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது.

எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் வழக்கமும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே வாகனங்களை மாடிபிகேஷன் செய்யக்கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இருந்தபோதும் தொடர்ந்து பலர் தங்களது வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொண்டேதான் உள்ளனர்.

குறிப்பாக இரு சக்கர வாகனங்களில்தான் அதிகம் மாடிபிகேஷன்கள் செய்யப்படுகின்றன. இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சைலென்சர்களுக்கு பதிலாக வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் சைலென்சர்களை பொருத்தி கொள்வது, பிரஷர் ஹாரன்களை பொருத்தி கொள்வது ஆகியவை இதற்கு ஒரு சில உதாரணங்கள்.

ஆனால் இவை இரண்டும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அத்துடன் சாலையில் பயணம் செய்யும் இதர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பை உண்டாக்குகின்றன. எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அளவிலான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பீகார் மாநில போக்குவரத்து துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. ஒலி மாசுபாட்டை கட்டுபடுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காரணம் இல்லாமல் ஹாரன்களை ஒலிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி போக்குரவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் கடும் அபராதம் விதிக்கவுள்ளனர்.

அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக புகார் பதிவு செய்யும்படி பொதுமக்களையும் அம்மாநில போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது. 120 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்புவதால், ஒலி மாசுபாடு விதிகள், 2000ன் படி பிரஷர் ஹாரன்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன விதிகள் செக்ஸன் 190(2)ன் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டூவீலர்களை வாங்கிய உடன் சிலர் சைலென்சர்களை மாற்றி விடுகின்றனர்.

குறிப்பாக புல்லட் மோட்டார்சைக்கிளில்தான் இது அதிகம் செய்யப்படுகிறது. இந்த சைலென்சர்கள் அதிகம் ஒலி எழுப்புகின்றன. இதன் காரணமாக இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு முதல் முறை 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறையும் அவர்கள் அதே தவறை செய்தால் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்படும். பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். அதனையும் மீறி பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications