Long Drive புதிய காரில் சென்றால் இந்த நோய் வருமாம் - சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்!!

தொலைத்தூர பயணங்களை புதிய கார்களில் மேற்கொள்வதால், புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிக்கர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனை பற்றிய முழுமையான விபரங்களையும், இதில் இருந்து தப்பிப்பதற்கான தீர்வுகளையும் இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில், காரில் பயணிக்கும்போது நமக்கு வித்தியாசமான பயண உணர்வு கிடைப்பது மட்டுமின்றி, வித்தியாசமான வாசனையும் கிடைக்கும். என்ஜின் ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக காருக்குள் சென்று அமர்ந்தவுடனேயே அந்த வாசனையை உங்களில் சிலர் முகர்ந்திருப்பீர்கள். அடிக்கடி காரில் செல்பவர்களால் அதனை அறிய இயலாமல் போகலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு காரில் பயணிப்பவர்களால் அந்த வாசனையை உணர முடியும்.

long drive in new car can cause cancer

காரின் உட்புற கேபின் பெரும்பாலான நேரங்களில் மூடியே இருப்பதாலும், காருக்கு உள்ளே பாகங்கள் ஒவ்வொன்றும் நெருக்கமாக அமைந்துள்ளதாலும் இத்தகைய வாசனை வெளிவரலாம். புதிய கார்களில் இந்த வாசனை சற்று வித்தியாசமாக இருக்கும். புதிய கார்களில் இருந்து வெளிவரும் இந்த வாசனையை நீண்ட நேரத்திற்கு முகர்ந்தால்தான் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காரை பயன்படுத்த, பயன்படுத்த நம் உடலில் இருந்து உதிரும் இறந்துப்போன மனித செல்களால் கேபினின் வாசனை சற்று வேறுப்பட ஆரம்பிக்கும். ஆனால் புத்தம் புதிய கார்களில் அவ்வாறான மனித செல்கள் மற்றும் மற்ற அசுத்தங்கள் இல்லாமல், கேபின் அலங்கரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட லெதர் மற்றும் அதனை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பிசினின் வாசனை அதிகமாக இருக்கும். தொழிற்சாலைகளுக்கே உண்டான வாசனையை கூட சிலர் நுகர நேரலாம்.

long drive in new car can cause cancer

ஷோரூம்களில் இருக்கும்போது சில பல வாசனை திரவியங்களால் இந்த வாசனைகளை உங்களால் உணர முடியாமல் போகலாம். ஆனால் காரை ஷோரூமில் இருந்து வெளியே எடுத்து வந்த உடன் லெதர், பிளாஸ்டிக் வாசனைகள் காரின் கேபினுக்குள் பரவ ஆரம்பிக்கும். அதாவது, ஷோரூமில் இருந்து வெளியே எடுத்துவந்த பின்னரே புதிய காருக்கே உண்டான அந்த வாசனையை நீங்கள் நுகர்வீர்கள். இவ்வாறான புதிய கார்களின் கேபின் வாசனையை வைத்து ஹார்வார்ட் பல்கலைக்கழகமும், சீனாவில் உள்ள பீஜிங் தொழிற்நுட்ப நிலையமும் சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டன.

இந்த ஆய்வு முடிவில், புதிய காரின் கேபினுக்குள் வரும் வாசனை புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும், நீண்ட நேரத்திற்கு புதிய காரின் கேபினுக்குள் இருப்பது ஆபத்தானது என்பதையும் கண்டறிந்துள்ளனர். தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புதிய கார்களின் கேபினுக்குள் வெறும் 20 நிமிடங்களிலேயே சுவாசிக்க கூடாத இரசாயன வாசனைகள் பரவ ஆரமித்துவிடுகின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

long drive in new car can cause cancer

மொத்தம் 12 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் காரின் கேபினுக்குள் வெவ்வேறான பாகங்களில் இருந்து வெளிவரும் வாயுக்களை கண்டறிய சென்சார்களை பயன்படுத்தி உள்ளனர். 12 நாட்களுக்கு புத்தம் புதிய கார்கள் முழுவதுமாக சீல் செய்யப்பட்டு ஒரே ஓரத்தில் நிறுத்தப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மனிதனுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய அசிடால்டிஹைடு வேதியியல் மூலக்கூறை புதிய காரின் கேபினுக்குள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிளாஸ்டிக் மனிதனுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடியது என ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய காரில் கேபினுக்குள் வீசும் வாசனை புற்றுநோயை உருவாக்கும் என்பது நம்மை மேலும் பயமுறுத்தக்கூடியதாக உள்ளது. இதனால் முடிந்தவரையில் புதிய காரை நீண்ட தூர பயணங்கள் பயன்படுத்தாதீர்கள். காருக்குள் பயணிக்கும்போது முககவசம் அணிவது இன்னும் நல்லது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 15, 2023, 17:02 [IST]
English summary
Travelling in new car could increase chance of developing cancer
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X