இந்த சம்பவத்துக்கு பிறகு எல்லாரும் ஹோண்டா கார் வேணும் என கேட்டு வாங்க போறாங்க!! எவ்வளவு பெரிய மரம்...
பெங்களூரில் பிராண்ட்-நியூ ஹோண்டா எலேவேட் (Honda Elevate) கார் ஒன்றின் மீது மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. அவ்வளவு பெரிய மரம் விழுந்த போதிலும் காரின் மேற்கூரை பெரியதாக சேதமடையாததது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பல இலட்சங்கள் கொடுத்து ஆசை, ஆசையாய் வாங்கிய கார் சேதமடைந்ததால் எவரொருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்ஸ்சூரன்ஸ் மூலமாக சேதமடைந்ததற்கான பணத்தை பெற்றுவிட முடியும் என்றாலும், சேதமடைந்ததை மறக்க முடியாது அல்லவா. பழைய கார் என்றால், ஓரளவிற்கு மனதை ஆற்றிக் கொள்ளலாம். அதுவே, புதிய காராக இருந்தால்...?

அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தில் சேதமடைந்த காருக்கு யாரும் உரிமையாளர் கிடையாது. ஏனெனில், விற்பனை செய்வதற்காக டீலர்ஷிப் ஷோரூமுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ஹோண்டா எலேவேட் கார் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது.
பெங்களூரில் இந்த சம்பவம் லாவேல்லே சாலையில் உள்ள ஹோண்டா ஷோரூமுக்கு வெளியே நடந்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் போக்குவரத்து போலீஸார் சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தில், மரம் எந்த அளவிற்கு பெரியதாக உள்ளது என்பதை காணலாம். இவ்வளவு பெரிய மரத்தை தாங்கி நிற்பதால், அந்த சாலை வழியாக செல்வோர் ஹோண்டா எலேவேட் காரின் உடல் வலிமையை ஆச்சிரியத்துடன் பார்த்தப்படி செல்கின்றனர்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் கடந்த மே 2ஆம் தேதி காலை 9.15 மணியளவில் டக்ஷின் ஹோண்டா என்கிற டீலர்ஷிப் ஷோரூமுக்கு வெளியே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஹோண்டா எலேவேட் கார் சில்வர் நிறத்தில் இருப்பதை படத்தில் காணலாம். நல்லவேளையாக, இந்த காரின் மீது விழுந்த மரம், உயிருடன் இருந்த மரம் கிடையாது.
ஏனெனில், இலை, கிளைகள் உடன் பச்சை பசேல் என்று உயிருடன் இருக்கும் மரம் அதன் ஈரப்பதத்தால் எடை மிகுந்ததாக இருக்கும். ஆனால், இந்த மரம் ஏற்கனவே உயிரற்றதாக காய்ந்த நிலையில் இருப்பதால், மரத்தின் எடை அதிகமாக இருக்காது. இதனால்தான், காரின் மேற்கூரை பெரியளவில் சேதமடையாமல் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூர் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பௌரிங் இன்ஸ்டிடியூட் சுற்றுச்சுவருக்கு அருகே இருந்த இந்த மரம், பல ஆண்டுகளாக காய்ந்து கிடந்தது. இந்த நிலையில், வெப்பம் காரணமாக தற்போது விழுந்திருக்கலாம் என தெரிகிறது" என்றார். மரம் விழுந்ததில் எவரொருவருக்கும் காயம் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எலேவேட் காரை பொறுத்தவரையில், ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் ஒரு எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு, எலேவேட் காரை விற்பனைக்கு கொண்டுவந்தது. ஹோண்டா எலேவேட் கார் இப்போதுவரையில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்படவில்லை. ஆனால், உலகளாவிய பாதுகாப்பு தரநிலைகளுக்கு உட்பட்டு இந்த எஸ்யூவி கார் தயாரிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மரம் விழுந்த போதிலும் காரின் மேற்கூரை வலிமையானதாக தாங்கி நின்றிருப்பது, ஹோண்டா எலேவேட் கார் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. இருப்பினும், எடை குறைவான காய்ந்த மரம் என்பதை இந்த விஷயத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை, பச்சை மரமாக இருந்திருந்தால் கார் முற்றிலுமாக சேதமடைவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








