இதுக்கு அப்புறம் இந்த ஸ்கூட்டரை வாங்க கஸ்டமர்ஸ் குவிய போறாங்க!! திடீர் மழையினால் நடந்த அதிசயம்!
பெங்களூரில் பெய்த மழையில் மரம் ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது விழுந்துள்ளது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், மொத்த மரத்தின் எடையையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி கொண்டு நிற்பதுதான். ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரத்தை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களுள் ஒன்று ஏத்தர் எனர்ஜி ஆகும். பெங்களூரை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஏத்தர் 450 விளங்குகிறது.

இந்தியாவில் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொஞ்சம் குறைவாகவே விற்பனையில் உள்ளன. அத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று ஏத்தர் 450 ஆகும். குறிப்பாக, அதிவேகமான பயணம், ஸ்டைலிஷான தோற்றத்துடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்ப்போரின் சாய்ஸாக இது உள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரின் செயல்படுதிறனை பற்றி நமக்கு தெரியும். ஆனால், இந்த ஸ்கூட்டரின் வலிமையை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில், ஏத்தர் 450 ஸ்கூட்டரின் வலிமை தரத்தை வெளிக்காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் என சொல்வதை காட்டிலும், விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரை கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழை உடன் சேர்த்து, இடி, மின்னலும் பெங்களூர் மக்களை பயமுறுத்தி வருகிறது. இதனால், பெங்களூருக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கனமழையினால் பெங்களூரில் வலுவற்று கிடந்த மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாய்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, மரம் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது விழுந்துள்ளது.
இருப்பினும், அவ்வளவு பெரிய மரத்தை ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி நிற்கும் வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மரத்தின் மொத்த எடையையும் சிவப்பு நிறத்திலான இந்த ஒரு ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே தாங்கி நிற்பதை இந்த படங்களில் காணலாம். அதாவது, மரத்தின் எடையை வேறெந்த வாகனமோ அல்லது கட்டிடமோ தாங்கி நிற்கவில்லை.

மரத்தின் நடுப்பகுதி சரியாக ஸ்கூட்டரின் இருக்கையின் மீது விழுந்துள்ளது. இதன் விளைவாக, ஸ்கூட்டரின் சைடு ஸ்டாண்ட் மடங்கி போனது. இந்த விபத்தினால், ஸ்கூட்டரில் ஏற்பட்டுள்ள ஒரேயொரு மற்றும் பெரிய சேதம் இதுமட்டுமே ஆகும். மேலும், ஸ்கூட்டரின் பின் டயரில் காற்று வெகுவாக குறைந்திருப்பதையும் காணலாம்.
இதுதவிர ஸ்கூட்டரின் எந்தவொரு பிளாஸ்டிக் பேனலும் சேதமடையவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரில் இந்த விபத்து சஹாகர்நகர் என்கிற பகுதியில் உள்ள கிருஷ்ணா டைமண்ட் என்கிற குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளது. ஈரமான மரம் இன்னும் கூடுதல் எடைமிக்கதாக இருக்கும். இருப்பினும், மரத்தின் எடையை ஸ்கூட்டர் தாங்கி நிற்பது சமூக வலைத்தளங்களில் பலரை ஆச்சிரியப்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு பெரிய மரத்தின் எடையை ஸ்கூட்டர் தாங்கி நிற்பது ஆச்சிரியமானதாக இருந்தாலும், இதன் பின்னால் ஒரு அறிவியலும் உள்ளது. அதாவது, மரத்தின் நடுப்பகுதி சரியாக ஸ்கூட்டரின் நடுப்பகுதியில் விழுந்துள்ளது. இது தற்செயலாக நடந்திருப்பினும், எல்லா பக்கமும் எடை சமமாகுவதால், ஸ்கூட்டர் சுமக்க வேண்டிய எடை வெகுவாக குறைந்திருக்கும். இதுவே, ஸ்கூட்டரை அதிக சேதாரங்கள் ஏற்படாமல் தடுத்துள்ளது என சொல்ல வேண்டும்.
Source: Reddit


Click it and Unblock the Notifications









